கலித்தொகையின் காலம் 81 பாண்டியனை வாழ்த்துவதாகச் செய்யுள் கூறுகிறது. சோழ வேந்தன் தனது நாட்டு முல்லை நில மக்களைப் பாடாதது வியப்பே அன்றோ? சோழ அரசன் தனது நாட்டு மக்களைப் பற்றிப் பாடாமல், பாண்டிய நாட்டு முல்லை நில மக்களைப் பற்றி மட்டும் தனது முல்லைக்கலியில் பாடினான் என்னல் சற்றும் பொருந்தாது. முல்லை நிலம் பாண்டியர்க்கே உரிமையுடையதுமன்று. பாண்டியனை வாழ்த்திப் பரவும் ஒரு குறிப்பிட்ட முல்லை நிலத்தாரைப் பற்றிச் சோழ வேந்தன் நூல் பாடினான் என்பது அறிவிற்கும் அநுபவத்திற்கும் சற்றும் பொருந்தாததாகும். - 3. நெய்தற்கலியைப் பற்றி ஒரு சிறு செய்யுளும் ஏனைய தொகை நூல்களுட் பாடியிராத ஒருவர், நெய்தற்கலியைப் பாடினார் என்பது, கருக்கொள்ளாது மகப்பேறு தோன்றினாற் போலாகும் அன்றோ? 4. கலித்தொகை முமுமையும் நன்கு ஆராயின் செய்யுட்கள் ஒரே ஆசிரியர் இயற்றியன என்பது புலனாம். இதனை ஒப்புக் கொள்ள மனமற்றவர் இவ்வெண்பாவினை வெளிக்கிளம்ப விட்டனர். இவ்வெண்பா எந்தக் கலித்தொகை ஏட்டிலும் இல்லை; வேறு நூல் ஏட்டுப் படிகளிலும் இல்லை; மாயமாய் வந்ததாகும். இதனை நன்கு யோசியாது, புலவர்கள், கலித்தொகையை ஐவர் பாடியதாகக் கொண்டுவிட்டனர்.” இது முற்றும் ஆதாரமற்ற இக்காலப் புலவர் எவரோ கட்டிவிட்ட வெண்பா ஆகும் என்பதே பேராசிரியர் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை, திரு. வித்துவான் வே. வேங்கடராஜுலு ரெட்டியார் முதலியோர் கருத்தாகும். 5. திருநெல்வேலி - சுவர்ணம் பிள்ளை அவர்கள் தமக்குத் கிடைத்ததாகக் கூறிய ஊசிமுறி என்னும் நூலைத் தமிழ்ப் பேராசிரியர் திரு. கா. நமசிவாய முதலியார் அவர்கள் பொருள் கொடுத்து வாங்கி ஆராய்ந்தார்கள்; அது போலி நூல் - பொருளுக்காக இக்காலப் புலவர் பாடிய பொய்ந்நூல் என்பதை அறிந்து கிழித்தெறிந்தார்கள். இங்ங்னம் பொருளுக்காகவும் விளையாட்டாகவும் பலர் தாமே கட்டிய பாக்களைப் பழம் பாடல்கள் எனக் கூறி ஏமாற்றல் உண்டு. அத்தகையோருள் ஒருவர் செயலாக இருக்கலாம் இவ்வெண்பாவின் படைப்பு எனக் கோடலே பொருந்தும். கலித்தொகைப் பாக்களின் நடை, மொழி அமைப்பு, சொல் அமைப்பு, நூல் முமுமையும் புராண இதிகாசக் கதைகள் விரவிக் கிடத்தல், பிற அகப்பொருள் நூல்களில் குறிக்கப்பெற்ற சிற்றரசர் பேரரசர் பெயர்களுள் ஒன்றேனும் குறிக்கப்படாமை முதலியவை, இந்நூல் கபிலர், பரணர் முதலிய புலவர்களுக்குப் பிற்பட்ட
பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/88
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை