பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 கால ஆராய்ச்சி திருமால் பற்றிக் கூறும் இடங்களில் இடம் பெற்றுள்ளன. எனவே, இவை கொண்டு நூலின் காலம் காணல் அருமையினும் அருமை! பரிபாடல்களுள் பல, திருமால் முருகன் ஆகிய கடவுளரைப் பற்றியவை. ஆதலால், அக்கடவுளரைப் பற்றி வடமொழிப் புராணங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. சுங்க மரபினர் காலத்தில் - கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் - வட இந்தியாவில் தோன்றிய பத்திநெறி தமிழகத்திலும் நன்கு பரவிவிட்ட காரணத்தாலும், கடவுளர் பற்றிய செய்திகள் வடமொழி நூல்களிலேயே முதலில் இடம் பெற்றிருந்த காரணத்தாலும் கடவுளர் பற்றிய பரிபாடல்களில் வடமொழிச் சொற்களும் புராணக் கதைகளும் ஒரளவு மிகுதியாக இடம் பெற்றிருத்தல் இயல்புதானே இரட்டைக் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை பெளத்த சமயத்தைப் பற்றியே பேச எழுந்தது. ஆதலால், அதன்கண் வடமொழிச் சொற்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அவ்வொரு காரணம் பற்றியே மணிமேகலை சிலப்பதிகார காலத்திற்குப் பிற்பட்டது என்று கூறுவது பொருந்தாது அன்றோ? 3. சிலப்பதிகாரத்தின் காலம் கயவாகுவின் காலமாகிய கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி (கி.பி. 114-136) என்பது முன்பு பல இடங்களில் கூறப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தில் வேங்கடம், திருவரங்கம், அழகர்மலை ஆகிய மூன்றும் திருமாலுக்கு உரியனவாகக் கூறப்பட்டுள்ளன. பத்துப் பாட்டுள் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை, அக்காலக் காஞ்சிக்கு அருகில் பள்ளிகொண்ட திருமால் கோவில் இருந்ததாக இயம்புகிறது. காந்தளஞ் சிலம்பிற் களிறுபடிந் தாங்குப் பாம்பணைப் பள்ளி யமர்ந்தோன் ೩ುಹ6T." 4. திருப்பரங்குன்றத்தில் சிவனைப்பாடிய சம்பந்தர் அங்குள்ள முருகனைப் பாடவில்லை என்பது இன்றுள்ள திருப்பதிகத்தைக் கொண்டு தெரிகிறது. அவர் பரங்குன்றத்தைப் பற்றிப் பாடிய ஒரே பதிகம்தான் கிடைத்துள்ளது. சம்பந்தர் பாடவில்லை என்பது கொண்டு, அவர் காலத்தில் திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் இல்லையென்று கூறுவது பொருந்தாது. ஏனெனில், அகநானூற்று 59ஆம் பாடலில், - சூர்மருங்கு அறுத்த சுடரிலை நெடுவேல் சினமிகு முருகன் தண்பரங் குன்றத்து அந்துவன் பாடிய சந்துகெழு நெடுவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/97&oldid=793450" இலிருந்து மீள்விக்கப்பட்டது