பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கால ஆராய்ச்சி மேற்கோள் காட்டியுள்ளனர். இவை மதுரைக்காஞ்சிக்கு மிகப் பிற்பட்ட நூல்களாயினும் அகத்தியர் இசை பாடி இராவணனை விரட்டினார் என்ற வரலாறு இந்நாட்டில் நெடுக வழங்கிவந்தது என்னும் உண்மையை உணர்த்துகின்றன அல்லவா? எனவே, அகத்தியர் தொகை நூல்களிற் குறிக்கப் பெறவில்லை என்பது பொருந்தாமை காண்க. பதினோராம் பரிபாடலில் "பொதியின் முனிவன்' என்று அகத்தியர் குறிக்கப்பட்டுள்ளார். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் பாடப்பெற்ற சிலப்பதிகாரம் எட்டாம் காதையில் (வரி 8) "பொதியின் மாமுனி என்னும் தொடர் அகத்தியரைச் சுட்டுதலைக் காணலாம். 6. "மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்” என வரும் மதுரைக் காஞ்சி அடியும் (வரி 429), "பெரிய நான் மாடத்தாலே மலிந்த புகழைக் கூடுதலையுடைய மதுரை” என வரும் நச்சினார்க்கினியர் உரையும் காணத்தக்கவை. இவை சங்க காலத்திலேயே கூடலில் (நான்) மாடம் இருந்ததை மெய்ப்பிக்கின்றன. கலித்தொகை 92ஆம் பாடலில் "நான்மாடக் கூடல்' என்பது வந்துள்ளது. கலித்தொகையின் காலம் கி.பி. 300 எனக் கொண்டாலும் அது சங்க நூலாதல் உறுதியே. எனவே, ‘நான்மாடக் கூடல்' என்பது கொண்டு பரிபாடல் சங்ககாலத்திற்குப் பிற்பட்டது எனக் கூறல் இயலாது. 7. அறிஞர் சுவாமிக்கண்ணுப் பிள்ளையவர்கள் பரிபாடலில் வரும் வானிலை பற்றிய செய்தி கொண்டு கூறிய காலம் பொருந்தாது என்பதைத் தக்க காரணம் காட்டிப் பேராசிரியர் பி.டி. சீநிவாச அய்யங்கார் மறுத்துள்ளார் என்பது இங்கு அறியத்தகும்." 8. நான்', 'ஆமாம் முதலிய சொற்கள் பொதுமக்களால் பேசப்பட்ட வழக்குச் சொற்கள் என்னலாம். அவை சமுதாயத்தில் பெற்றுள்ள செல்வாக்கினால் சில சமயங்களில் புலவர் பாக்களில் இடம் பெறுதல் இயற்கை. நாம் வாழும் இக்காலத்தில் புலவர் சிலர் இலக்கியச் சொற்களையே பயன்படுத்தி நூல் எழுதுவதும், புலவர் பலர் எளிமை கருதிப் பேச்சு வழக்குச் சொற்களை மிகுதியாகப் பயன்படுத்தலும் இயல்பாக இருக்கின்றன. பரிபாடல்களுள் பல வழிபாட்டுப் பாடல்கள் பொது மக்களுக்கு உரியவை. எனவே, அவற்றிற்கு இசையும் வகுக்கப்பட்டது. ஆதலால் மக்கள் பேச்சு வழக்கிலிருந்த நான், ஆமாம் போன்ற சொற்கள் இடம் பெற்றன என்று கொள்வது பொருத்தமாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/99&oldid=793452" இலிருந்து மீள்விக்கப்பட்டது