பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காளிதாசன் உவமைகள்

13


சீதை கருவுற்றவள் முன் வனவாழ்வில் நுகர்ந்த காட்சிகளையும் வனத்தில் உள்ள அன்னப்பறவைகள், அன்போடிருந்த பெண்கள்,தவ வனங்கள் ஆகியவற்றைக்கான விரும்பினாள்.தன் ஆசையை நிறைவேற்றுவதற்காகவே, இலக்குமணனுடன் தன்னைக் கங்கைக் கரைக்குக் கணவன் அனுப்புவதாக நினைத்துக்கொண்டிருந்தாள்: இராமனைக் கற்பகமாகவே கருதினாள். ஆனால், அவன் கத்தி போன்ற கூர்மையான இலைகள் உள்ள வாள் இலை மரமாக மாறியதை, பாவம் அவள் அறியவில்லை. ர. 14:48

ரே நீர்நிலையில் தாமரை ஒரிடத்தும் ஆம்பல் மற்றொரு இடத்தும் உள்ளன. விடியற்காலையில் தாமரை மலர்கள் அலர, ஆம்பல் மலர்கள் கூம்புகின்றன.

இந்துமதியின் திருமண மண்டபத்தில் அஜனை அவள் மலையிட்டதால் முகம் மலர்ந்த கூட்டம் ஒன்று; ஏமாற்றத்தால் வாடிய அரசர் கூட்டம் மற்றொன்று. ஒன்றின் மலர்ச்சியில் மற்றதன் வாட்டம் இயற்கை. ர.6:86

றுதியாகக் கட்டப்பட்ட பல மாடங்கள் கொண்ட அழகிய மாளிகை சிறந்த காவல் உடையது; அதன் மீது ஆலமரத்தின் சிறு விதை விழுந்து முளைத்துவிட்டது. என்ன முயன்றாலும் அவ்விதையில் தோன்றிய மரம் அம்மாளிகையை அழித்தே தீரும். விதை சிறிது:ஆனால் அழிவோ பெரிது. ர. 8:90

நாள் ஒளிவீசிய வெய்யோன் செக்கர் வானில் கறைபடிந்த கைகளுடன் மறையும் போது, கீழ்த் திசையில் குளிர்மதி எழுகிறது. சற்று நேரத்தில் அம் மதியின் அமுதக் கதிர்கள் தன் ஒளியைப் பரப்பி மக்கள் மனத்தை மகிழ்வித்து, பயிர்கள், மூலிகைகள் வளர உதவும்; மேல் திசையில் உள்ள இரத்தக் கறை யும் நீங்கும். மதி ஞாயிற்றினின்று பெற்ற ஒளியே ஞாயிற்றால் உண்டான வெம்மையை நீக்க உதவுகிறது; வெப்பத்தால் வருந்திய மக்களை மகிழ்விக்கிறது.

பரசுராமனின் வீழ்ச்சியும் தசரத இராமனின் எழுச்சியும் ஒருங்கே நிகழ்ந்தன. ர. 11:82