பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

காளிதாசன் உவமைகள்


உமையும் சிவனும் ஒத்த காமம் கொண்டவராகத் தம் வாய்ச்சுவையும் நாற்றமும் நுகர்ந்தனர். அவர்களுக்குக் காமப் புதுமணவின் தேறல் தெவிட்டவில்லை. கு. 8:16

டல் கொண்ட காதலியை, அவளுடைய காதலன் நெடுந்தொலைவினின்று காண்கிறான்.அவன் அணுகும்போது அவள் நெற்றி களித்து, முகம் கோட்டி, அமைகிறாள். அவள் அரை மனத்துடன் தடுத்தும் அருகில் வந்து அவளுடைய துடிக்கும் உதட்டில் அவன் முத்தம் இடுகிறான்.

விதிசபுரியின் மேல் மேகம் வடக்கு நோக்கிச் செல்கிறது. வேத்ரவதி ஆறு சுழிகளோடிச் சிற்றலைகள் கரையில் மோத, அவ்வூரினிடையே ஒடுகிறது. மேகம் கீழே இறங்கி அவ் ஆற்றில் படிந்து, நீரைப் பருகுகிறது. இயக்கனுடைய தூதைச் சொல்ல வடஇந்தியாவின் கொடிய வெப்பத்தில் மெய்வருந்த நெடுந் தூரம் வந்ததற்குப் பரிசு இது. மே: 1:24

சிவபெருமான் ஆசான்; உமை மாணவி, காமக்கலையே கல்வி. இரகசியத்தில் இருவரும் ஒன்றுகூடி இருந்தபோது ஆசான் மாணவிக்கு அக் கலையைப் பயிற்றினான்.

காமக்கலையை ஏதும் அறியாப் பேதையாகப் பயிலத் தொடங்கிய உமை விரைவில் அக் கலையில் நிபுணியாகி விட்டாள்.

குருதக்ஷிணை?

தன் குருவுக்குச் சமமான வல்லமை பெற்று, அக்கலையால் அவனுக்குத் தன்னையே உரிமையாக்கித் தந்த இன்பமே அவள் குருவுக்குத் தந்த 'தக்ஷிணை'. ( தக்ஷிணை என்ற சமற்கிருதச் சொல் 'ஸாமர்த்யம், வல்லமை, முழு நிறைவு பெறுவித்தல்' எனப்பல பொருள்களை உட்கொண்டது) குரு இதனினும் வேறு என்ன சிறந்த தக்ஷிணையைப் பெறமுடியும்? கு. 8:17

ரிய மேகம் மெதுவாக ஊரில் இறங்குகிறது. உயர்ந்த மாளிகைகளை அணுகுகிறது.முன்றில் தோறும், மாடந்தோறும், நுழைகிறது. வெள்ளி வீழ் (விழுது போல மழைத் துளிகளைச் சொரிகிறது.