பக்கம்:காளிதாசன் உவமைகள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காளிதாசன் உவமைகள்

27


ஆறு நிறைந்து ஓடி மக்களுக்குப் பயன்படும். இப் பிரிவெனும் துயர் நீங்க, நற்காலம் வரும். அதற்காக உன் உடலைப் பாதுகாக்க வேண்டும், உடலை அழித்துக்கொள்ளள முற்படாதே."

காமன் எரிந்ததும் தன்னையும் அழித்துக்கொள்ள முற்பட்ட இரதியைத் தேவர்கள் தடுத்து நிறுத்துகின்றனர். கு.4:44

புற வெப்பம் எந்தப் பொருளையும் உறுதி குலையச் செய்கிறது; தளர்ச்சி அடைவிக்கிறது. இரும்பையும் பழுக்கக் காய்ச்சினால் அது இளகி மென்மை அடையும்.

அழியும் உடலைப் பற்றி சொல்லவா வேண்டும்? துயரத்தால் உண்டாகும் அக வெப்பம் அசையாத சிந்தையையும் அழியாத உள்ளத்தையும் இளக்கிக் குலைத்துவிடும்.

உன் துயரத்திற்கு ஒரு காரணம், அன்பு பூண்டோரைப் பிரிந்தது. ர.8:43

"கொழுந்தோடிப் படர்கின்ற கொடி கொள் கொம்பை நாடுகிறது.அதன் நிலைக்கு இரங்கி, ஒரு கொம்பைத் தேடித்தா: அன்றி. அதுவே கொம்பைப் பற்றிக் கொள்ளட்டும் என உன் வழியே போ. அந்தோ, அக் கொடியின் மேல் கொதிக்கும் நீரை வார்த்துவிட்டுச் செல்கிறானே! என்ன கொடுமை!”

சகுந்தலை கருவுற்றிருக்கிறாள்; தன்னை நீங்கிய காதலன் வருவான் எனக் கருதி திசைகள் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள்; உடல் சேர்வுடன், மனத்துயரமும் வாட்ட, அவள் தன்னையே மறந்துள்ள நிலைமையில் வாசலில் வந்த முனிவனை உபசரித்து 'அதிதி ஸத்காரம்' செய்யவில்லை. அவள் தன்னைப் புறக்கணித்தாள் என முனிவன் சினந்து, அவளைச் சாபம் இட்டு அகன்றாள். அச் சாபத்தையும் அவள் அறிந்தவள் அல்லள். ச. 4:1

'ஒல்கி நடக்கும்', மெதுவாகப் போகும், ஆற்றில் அயிரை மீன்கள், மணிகளைப்போல் மிளிர்ந்து விளையாடுகின்றன; பறவைகள் முத்தாரம் போல் வரிசையாக ஆற்றங்கரையில் அமர்ந்துள்ளன; நீர் சுருங்க, வெண்மணல் பரப்பும் திட்டுகளும் அகன்றும் உயர்ந்தும் காணப்படுகின்றன.