81 மணிமேகல் சிறைப்படல் பொழுது புலர்ந்ததும் உதயகுமரன் வெட்டுண்டு இறந்த செய்தியைச் சக்கரவாளக் கோட்டத்தில் வாழும் தவமுனிவர்கள் அறிந்தனர். அவர்கள் அரசன் கோயிலே அடைந்து நடந்த செய்தியை அரசனுக்கு அறிவித்தனர். அதுகேட்ட அரசன், தன் மகன் மடிந்த தற்குச் சிறிதும் மனம் வருந்தவில்லே. உடனே, தன் அமைச்சனகிய சோழிகவேனதியை அழைத்தான். 'மனுவேந்தன் மரபில் ஒரு தீவினையாளன் பிறந்தான் என்ற பழிச்சொல் ஏனைய மன்னர்களின் செவியில் சேர் வதற்குமுன் உதயகுமரன் உடலைப் புறங்காட்டில் கொண்டு பொசுக்குக; கணிகையின் மகளாகிய மணி மேகலையையும் சிறைப்படுத்துக" என்று கட்டளை யிட்டான். அரசன் ஆணையைச் சிரமேல் கொண்ட அமைச்சன் அவ்வாறே செய்தான். அரசமாதேவிக்கு அறவுரை மகனே இழந்த துயரால் வருந்திய இராசமாதேவி சிறைப்பட்ட மணிமேகலையை வஞ்சித்து வருத்தும் கருத்துடையவளாய் அவளே விடுதலே செய்யுமாறுவேக் தனே வேண்டினள். அரசனும் அங்ங்னமே மணி மேகலையை விடுதலை செய்தான். அவளேச் சிறையி னின்றும் விடுவித்த இராசமாதேவி அவளேத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்ருள். அவட்கு மயக் கும் மருந்துாட்டியும், கற்பை அழிக்குமாறு கல்லா இளேஞனே ஏவியும், புழுக்கறையுள் அடைத்துப் பூட்டி யும் பலவாறு துன்பம் செய்தாள். அவள் ஒன்ருலும் துன்பம் சிறிதும் இன்றி மலர்ந்த முகத்துடன் இருந் தாள். ST. ಶ್ರ.-6
பக்கம்:காவியம் செய்த மூவர்.pdf/89
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை