பக்கம்:குக்கூ.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

குழாயிலிருந்து
விழுந்தது தண்ணீர் கனமாய்
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுத்
தொட்டியில் விழுந்தேன்
அம்மணமாய்.....


30

ஆயிரம் ஈக்கள்
மொய்க்கும் ஆசையில்
வானத் தட்டில்
இராத்திரிக் கிழவி
சுட்டு வைத்த
ஒற்றைத் தோசையில்

மீரா ◯ 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/38&oldid=1233673" இலிருந்து மீள்விக்கப்பட்டது