பக்கம்:குக்கூ.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


39

தூங்கிக் கிடக்கும்
தோட்டத்தில்
தளிர் கிளை மொட்டு
இதமாய்த் தொட்டு
தேவ ரகசியம்
சொல்லிப் போகும்
சாம நிலா



40

பாதிச்சண்டை
பங்காளிச் சண்டை
அதோ.... கடல் ஆத்தாளின்
ஆயிரம் பிள்ளை அலைகள்.....
முட்டி மோதி
சிதறுகாயாகும்
அவற்றின் தலைகள்.

42 குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/43&oldid=1233066" இலிருந்து மீள்விக்கப்பட்டது