பக்கம்:குக்கூ.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

99

கண்ணுப் பாப்பா
கடித்து வைத்தது
சாமிக்குப் பக்கத்தில்
மிட்டாய் பெரிசாய்
எறும்புகள் வந்தன வரிசையாய்
மிட்டாய் கும்பிட.


100

குளத்தில் பிடித்த மீனை
கிணற்றுள் போட்டு வளர்த்தான்
தொட்டியில் போட்டு எடுத்தான்
சட்டியில் போட்டு வறுத்தான்
வயிற்றில் போட்டு முடித்தான்.

72 குக்கூ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/73&oldid=1233085" இலிருந்து மீள்விக்கப்பட்டது