பக்கம்:குக்கூ.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

சூரியன் மறைந்துவிட்டான்
என்று நீ
சோர்ந்து விழாதே;
சந்திரன் வரும்
நட்சத்திரங்கள் வரும்
வலைத்துப் பிடி விடாதே!

106

காற்று வரட்டுமென்று
சாளரம் திறந்தேன்
சந்தைக் கூட்டம்
மந்தைக் கூட்டம்
சரசரவென்று பாய்ந்தது பார்வையில்
ஐக்கியமாகிச்
சிட்டாய்ப் பறந்தேன்.

மீரா 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குக்கூ.pdf/76&oldid=1233089" இலிருந்து மீள்விக்கப்பட்டது