பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

91


முறையாக நன்மதிப்பீடு செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இது கல்வியின் முதற்குறிக்கோள்! மனிதன் தன்னுள் இருக்கும் அளவில்லாத ஆற்றலை உணர வேண்டும். தனக்கு இயல்பாக வாய்த்துள்ள நுண்ணறிவை-சுய அறிவைத் துரண்டிக்கொண்டு வாழ்க்கையின் அனுபவத்திற்குக் கொண்டு வரவேண்டும். மனிதன், வாழுங்காலத்தில் நொடி தோறும் புதிய புதிய எண்ணங்களை அடைய வேண்டும். அந்த எண்ணங்களும் உலகை நோக்கி விரிந்தனவாகவும் உயர்வுடையனவாகவும் அமைதல் வேண்டும். அவன் எண்ணிய எண்ணங்களை அடைய, புத்தார்வத்துடன் எழுச்சியுடன் உழைப்பவனாகவும் இருக்க வேண்டும். இவ்வளவையும் மனிதன் பெறும்படி செய்வது கல்வி, இத்தகைய கல்வியை நாம் நமது தலைமுறையினருக்குத் தருகிறோமா? தர முயற்சியாவது எடுக்கிறோமா? எண்ணிப் பாருங்கள். நமது குழந்தைகளிடம் வளர்ந்து வரும் சார்புகளைச் சார்ந்தே வாழும் மனப்போக்கை மாற்றவேண்டும். குழந்தைகள் தன்னம்பிக்கையுடன்கூடிய தற்சாற்பு நிறைந்த வாழ்க்கையைப் பெறச் செய்வதையும் கல்வியின் நோக்க மாகக் கொள்ள வேண்டும். நமது குழந்தைகள் அவர்களுடைய முழு ஆற்றலையும் உபயோகிக்கும் தகுதியுடைய வர்களாகச் செய்ய வேண்டும். இங்ஙணம் குழந்தைகளை வளர்ப்பதே உண்மையான கல்வி.

இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியர்கள். இன்றைய இளைஞர்கள் நாளைய இந்தியாவை ஆள்பவர்கள். ஆதலால், கல்வி என்பது அவர்களின் எதிர் காலத்தில் எழும் சிக்கல்களுக்குத் தீர்வு காணக்கூடிய வகையில் அமைய வேண்டும். கல்வி ஏன்? நல்ல காரியங்கள் செய்வதற்காக மட்டுமா? இல்லை. ஒரோவழி நல்ல காரியங்கள் கற்காதவர்கள், அறிஞர்கள் மூலமாகக்கூட நடந்துவிடலாம். ஆதலால், நல்லவனாக வாழ்ந்திடவும் நன்மைகள் செய்யவும் கற்றுக்கொடுப்பது கல்வியின் நோக்கமன்று நல்லவர்களாகவும்