பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/114

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நிலத்தின் மேற்பரப்பில் உள்ள மண் கண்டமே பசுமையை கருவுயிர்க்கும் ஆற்றலுடைய மண். இந்த மண் கண்டம் தோன்ற ஒராயிரம் ஆண்டுகள் ஆகின்றன என்று அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். கல்தோன்றி மண் தோன்ற நீண்ட காலம் பிடிக்கிறது. ஆதலால் நிலப்பரப்பின் மேற்பகுதி மண் கண்டத்தை பாதுகாக்கவேண்டும். அதற்கு என்ன செய்யவேண்டும்? நிலமகள் எப்போதும் பசுமையால் மூடப் பெற்றிருக்க வேண்டும் என்ற அறிவியல் சார்ந்த நோக்கில் மக்கள் வளர்ந்தால் இந்த நாட்டு நிலம் தள்ளா விளையுளாக வளரும், மாறும்!

நிலத்தைப் போலவே, தண்ணிரையும் துய்மையாகக் காப்பாற்றுவதுடன் தண்ணிர் வளத்தையும் பராமரிக்க வேண்டும். பழங்காலத்தில் தண்ணிர் தாராளமாகக் கிடைத்திருக்கும்போல் தெரிகிறது. அதனால் தாராளமான செலவினங்களைத் ‘தண்ணிரைப்போல’ என்று கூறுவதுண்டு. இன்று மழை வளம் குறைவதால் நிலத்தடி நீர் வளமும் குறைகிறது. ஆதலால் நீர் மேலாண்மை அறிவியல் மக்களிடம் வளர்ந்தாக வேண்டும். அதுபோலவே மழை வளத்தை மேலும் மேலும் பெறவும் நிலத்தடி நீர் வளத்தைப் பாதுகாக்கவும் காடுகள் துணை செய்யும். ஆதலால் நல்ல உயரமான அடர்த்தியாக வளரக்கூடிய மரங்களைக் காடுகளாக வளர்க்கவேண்டும். காடுகள் பல நோக்குப் பயனுடையன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். காடுகள் பற்றிய அறிவியல் சார்ந்த விழிப்புணர்வே மக்கள் நலன் காக்கும். நாட்டின் வளம் காக்கும்.

உயிர், உடல் சார்ந்த வாழ்க்கையை நடத்துகிறது. ஆதலால் உடல், உடலின் இயக்கம், உடலின் தேவைகள் ஆகியன பற்றிய அறிவியல் உணர்வு தேவை. உடம்பு வளர்ந்தால்தான் உயிர் வளரும். “உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!” என்றார் திருமூலர். உடம்பு ஒரு அறிவுக் கருவி. உயிரின் அறிவு வாயில்கள் புலன்கள் உயிரின்