பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அரசே விற்கும் அவல நிலை தோன்றிவிட்டது. இன்று பனத்தால் பணம் சம்பாதிக்கும் ஆர்வமே மக்களிடையே வளர்ந்துள்ளது. ஆதலால் நாட்டை - நாடாக - வளமான நாடாகப் படைத்தளிக்க அறிவியல் சார்ந்த உழைப்பு தேவை.

உலக வாழ்வியலை, உயிரோட்டமாக இருந்து இயக்குவது பொருளியல், பண்டம் மாற்று முறைக்குப் பதிலாக நாணய மாற்றுமுறை வந்த பிறகு இன்றைய செல்வம் உலகந்தழுவிய வடிவத்தைப் பெற்றிருக்கிறது. ஆதலால் பொருளியல் சார்ந்த அறிவியல் தேவை. திருக்குறள்,

“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு”

என்று கூறுகிறது. இயற்றலாவது-பொருள் வருதலுக்குரிய புதிய வாயில்களைக் கண்டறிதலும் அவ்வாயில்களுக்குத் திட்ட வடிவம் கொடுத்து இயங்கி உழைத்துப் பொருளை ஈட்டுதலாகும். ஈட்டும் செல்வம் சில்லறையாக அழிந்து போகக்கூடாது. ஈட்டும் செல்வம் “முதல்” ஆகும் தகுதி பெறும் வரையில் காத்தல் வேண்டும். காத்த செல்வத்தை வாழ்க்கையின் துறைகள் பலவற்றிற்கும் வகுத்துப் பயன்படுத்த வேண்டும். பொருளாதார அறிவு, மக்களிடையில் வளர்ந்தால்தான் அவர்களைச் சுரண்டிக் கொழுக்கும் வர்க்கத்தினரிடமிருந்து மக்களைக் காக்க முடியும். மக்கள் பொருளியல் சார்ந்த அறிவியலில் போதிய அறிவு விளக்கம் பெற்றால்தான் பல தலைமுறைகளாக வாட்டி வதைக்கும் வறுமை ஏழ்மையிலிருந்து மக்களை மீட்க முடியும். “உள்ளவர்களுக்கு மேலும் தரப்படும். இல்லாதவர்களிடமிருந்து உள்ளதும் எடுக்கப்படும்” என்ற விவிலிய உரையை ஓர்சு! உணர்க!

இன்று அறிவியல்துறை பலப்பலவாக வளர்ந்துள்ளது. நாளும் வளர்ந்துகொண்டிருக்கிறது. இயற்பியல், உயிரியல், தாவரவியல், வேதியல், மின்னியல் என்றெல்லாம் வளர்ந்து