பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

107


விருப்பு வெறுப்புக்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தேர்தல் முடிவுகளில் புலனாகிறது. விருப்பு-வெறுப்புக்கள் மட்டுமே அவற்றின்பாற்பட்ட உணர்ச்சிகள் மட்டுமே நிரந்தரத் தீர்வைத் தந்துவிட முடியாது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய வகையில் மக்களாட்சி அமையத்தக்க வகையில் உள்ள கொள்கை, கோட்பாடு உடையவர்களை மக்கள் ஆதரித்து ஆட்சியில் அமர்த்த வேண்டும். ஆட்சியின் திட்ட்ங்கள், செயற்பாடுகள் அவற்றில் உள்ள குற்றங் குறைகள் முதலியவற்றை மக்கள் கூர்ந்து கவனித்து விமர்சனம் செய்யும் அறிவைப் பெற்றால்தான் நல்ல அரசு அமையும். மனிதன் பயமின்றிச் சுதந்திரமாகப் பேச, எழுத வாழ வாய்ப்பு வேண்டும். -

அறிவியலில் மணிமுடியாகத் திகழ்வது சமயம். சமயமும் ஓர் அறிவியலேயாம். அறிவியல் துறையில் உயிரியலில் சமயவியல் வருகிறது.

“அறிவுதந்தெனை ஆண்டுகொண்ட
அற்புதம் அறியேனே!”

என்பது திருவாசகம்.

உயிர் நிறைநலம் பெறுதலே வாழ்க்கையின் நோக்கம்; குறிக்கோள். அந்நிறைநலமாகிய இன்ப அன்பினை நோக்கித் தொடங்கிய பயணமே வாழ்க்கை. இன்றோ சமயவியல் அறிவியலாக விளங்காமல் மூடத்தனம் நிறைந்த கொள்கைகள், கோட்பாடுகள், பழக்கங்கள், வழக்கங்கள், சடங்குகள், நிறைந்து பயனற்றுப் போனதோடன்றி, நம்முடைய காலத்தையும், ஆற்றலையும், செல்வத்தையும் கொள்ளையடிக்கிறது! இவை மட்டுமா! மனிதத்தை முட்டாளாக்கி பயமுறுத்தி ‘கடவுள் கோபம்’ என்றெல்லாம் சொல்லி, வாழ்க்கையைக் கெடுக்கின்றது! கடவுள் ஒருவர் தான்! ஒருவரே தான்! சத்தியமாக வேறொரு கடவுள் இல்லை! இதுவே உண்மை. ஒரே கடவுளை வணங்கும் மாந்தர்களிடையில் மதங்களைப் படைத்து, வேற்றுமையை வளர்த்து பகைமையை மூட்டி