பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/120

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


இந்தப் புவியைக் கலகக் காடாக்கி வருகின்றனர். இதுவல்ல சமயம் !

சமயம் ஒரு சிறந்த-அறிவியலுள் சிறந்த அறிவியலாகும். குறைவிலா நிறைவாக, கோதிலா அமுதாக, அறிவுக்கு அறிவாக, நன்றாக, இன்பமாக விளங்கும் பரம்பொருள் நெறி நின்று, எண்ணி வாழ்தல் மூலம், உயிர்கள் தாமும் நிறைநலம் பெறுதலே, சமயவியல். இத்தகு சமயவியல் அறிவு, மக்களைச் சென்றடையாதவரை அவர்கள் ஞானம் பெறமாட்டார்கள். இந்த மண்ணகம் விண்ணகமாகாது.

இந்த யுகம் அறிவியல் யுகம். இந்த அறிவியல் யுகத்தில் அறிஞர்கள் மக்களுக்காக அறிவியலை வளர்த்து மக்களை அறிவியல் நெறியில் ஈர்த்து, இணைத்து, அழைத்துச் சென்றாலே, மன்பதை சிறக்கும்; வையகம் வளரும்; வாழும்!

4. தமிழ்ப் பல்கலைக் கழக
அறக்கட்டளைச் சொற்பொழிவு


1-8-1991


1.மக்களுக்காக அறிவியல்

மானுட வாழ்க்கை

வாழ்க்கையென்பது இன்னமும் பூரணமாக விளக்கப் பெறாதது. வாழ்க்கையென்பது ஒரு அந்நிய மொழி போலவே இன்றுவரை விளங்குகிறது. எல்லாரும் இதைத் தவறாகவே உச்சரிக்கிறார்கள்.

மானுட வாழ்க்கை மாயையுமல்ல. பொய்யும் அல்ல; கற்பனையும் அல்ல; விபத்தும் அல்ல. இந்த வாழ்க்கை உண்மை; முற்றிலும் உண்மை, மானுட வாழ்க்கை வாய்த்ததே