பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/123

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

111


பொறிகளை அடக்கி வெற்றி கொண்டு தாம் விரும்பியவாறு இயக்கிப் பயன்கொள்வதே மானுடத்தின் வெற்றி. பொறிகளின் மீது தனியரசாணை செலுத்தும் மானுடம் வெற்றிபெறும். மானுடம், மானுட வாழ்க்கை இயக்கத் தன்மையுடையது. தேக்கம் மானுடத்திற்குப் பகை! ஆதலால், மாந்தன் ஓயாது ஒழியாது செயற்பட்டால் வெற்றி பெறுவான்.

மானுடத்திற்கு விரிந்து பரந்த செயற்களம் இயற்கையாகவே அமைந்துள்ளது. செயற்பாட்டுக்கே உரிய புலன்களும் பொறிகளும் அமைந்துள்ளன. மானுடம் தொழில் புரிதலையே இலட்சியமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். மானுடம் தொழில் செய்வதிலேயே வளர்கிறது! பக்குவப்படுகிறது. மானுடம், மானுடத்தின் வளர்ச்சிக்காக அமைந்த புவிக்கோளத்துடன் பொருந்தித் தொழில் புரிதல் வேண்டும்! உடன் பிறந்து வாழும் மாந்தருடன் கூடித்தொழில் புரிதல் வேண்டும். மானுடம் பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விடக்கூடாது. மானுட வாழ்வு முழுமையுடையதாக அமையின் மானுடம் வெற்றிபெறும்! இந்த வையகம் பயன் பெறும்; வரலாறு சிறக்கும்; இந்தப் புவிக்கோளத்தில் வளம் கொழிக்கும்; எல்லாரும் இன்புற்று வாழ்வர்!

மானுடத்தின் வளர்ச்சி

இந்தப் புவிக்கோளத்தில் உயிர்க்குலம் தோன்றிப் பல நூறாயிரம் ஆண்டுகள் உருண்டோடிய பிறகு பரிணாம வளர்ச்சியில் மனித குலம் தோன்றியது. உயிர்க்குலம் - மனிதகுலம் படைக்கப்பட்டதன்று. உயிர் என்றும் உள் பொருள் “உள்ளது தோன்றாது இல்லது வாராது” என்பது கோட்பாடு! மனித குலம் தோன்றி மெள்ள மெள்ள இன்றுள்ள நாகரிக நிலைக்கு வளர்ந்து வந்திருக்கிறது. ஆதி மனிதன் நிர்வாண நிலையில் திரிந்தான். குடும்ப அமைப்பு இல்லை. முதலில், கிடைத்ததைத் தின்றான். பின் மெள்ள உள்ளிருந்து உந்திச் செலுத்திய உணர்வினாலும் நடைமுறை