பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

123


உருவாகிறது. மனிதன் கண்ட முதல் அறிவியல் தொழில் நுட்பம் வேளாண்மைதான் என்று எண்ணத் தோன்றுகிறது.

வேளாண்மை

வேளாண்மைத்துறை அறிவியல் நாளும் வளர்ந்து இன்று அது ஒரு சிறந்த அறிவியல் துறையாக விளங்குகிறது. இன்று நமது நாட்டில் உணவுப் பொருள் பற்றாக்குறை இல்லை. தன்னிறைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை அடையத் துணையாக இருந்தது வேளாண்மைத்துறை அறிவியலே. நிலத்தின் இயல்பறியும் அறிவியல் வளர்ந்துள்ளது. மண் சோதனை செய்து மண்ணுக்குத் தகுந்த பயிரினம் பயிரிடலாம்; அல்லது நிலத்திற்கு ஏற்ற உரம் முதலியன இட்டுப் பண்படுத்தி நிலத்தின் இயல்பை மாற்றலாம் என்ற தொழில் நுட்பம் கிடைத்துள்ளது. மற்றும் பயிர்ப் பாதுகாப்புமுறைகள் வளர்ந்துள்ளன. குறுகிய காலப் பயிர்கள் இன்னபிற கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக வேளாண்மைத் துறையில் இயந்திரங்கள் நிறைய வளர்ந்துள்ளன. பலநூறு ஏக்கர் நிலத்தை இரண்டு மணி நேரத்தில் எளிதில் சாகுபடி செய்யக் கடிய அளவுக்கு வேளாண்மையியலில் இயந்திரப் புரட்சி வளர்ந்து வந்துள்ளது. வேளாண்மைத்துறை அறிவியல் வளர்ச்சி மக்களுக்காகவே. ஆனால், மக்கள் எவ்வளவு தூரம் புரிந்து கொண்டிருக்கின்றனர்?

நிலம்

ஐம்பூதங்களில் தலையாயது நிலம்! ஏன் ? மானுடத்தின் வாழ்க்கை முழுதும் நிகழ்வது இந்த மண்ணில் தானே! மனிதனுக்கு வேண்டிய உணவைத் தருவது நிலமே. நிலத்தின உயிர்ப்பு நிலை உணரப்படுவதில்லை. இன்று மக்கள் பணத்தை மதிக்கிறார்கள். ஆனால் நிலையான அடிப்படைச் சொத்தாகிய நிலத்தின் மதிப்பைக் குறைத்துவிடுகிறார்கள். சரியானபடி உரமிடாமல் நிலத்தைச்