பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/137

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

125


பாத்தியாகப் பிரிக்கப்பெற்று வரப்புக்கள் கட்டப்பெற வேண்டும். நிலத்தில் ஏதாவது மரம், செடி, கொடிகள் இருந்து கொண்டே இருக்கவேண்டும். அப்படியிருந்தால் மண் அரிப்பிலிருந்து நிலத்தை மீட்கலாம்.

நிலத்தில் தண்ணிர் தேங்கக்கூடாது; நிற்கக்கூடாது. “நீர் மறைய நீர் விடு” என்பது பழமொழி. நீர் தேங்கி நின்றால் நிலம் களர் நிலமாக மாறிவிடும். களர் நிலத்திற்கு என்று பயிர்கள் இருந்தாலும் ஏன் களர் நிலமாக வேண்டும்?

நிலத்தின் வளத்தையும் நிலத்தடி நீர் வளத்தையும் மனித வளத்தையும் காப்பாற்றக் கூடிய ஒரே வழி மரங்கள் வளர்த்தலேயாம். நிலங்களின் பூசாரத்தைக் காப்பதற்கு மரங்களிலிருந்து உதிரும் தழைகள் உதவி செய்கின்றன. நிலத்திற்குள் செலுத்தி நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்கிப் பாதுகாக்கின்றது. சிலர் நினைப்பதுபோல உழுவதால், மரங்கள் நடுவதால் தண்ணிர் வீணாவதில்லை. மாறாக மரங்கள் 10% தான் தண்ணிர் குடிக்கும். மண் குடிப்பதையும் சேர்த்தால் 20% க்கு மேல் போகாது. ஆனால் நிலத்தில் தாவரங்கள், மரங்கள் இல்லாது போனால் நிலம் மண் அரிப்புக்கு இரையாகி நிலம் முழுதுமே பாழ்படும். அதுமட்டுமல்ல. பெய்த மழை நீர் 10% முதல் 20% தான் பயிற்களுக்குச் சேரும். மீதி மழை நீரெல்லாம் வீணாகிவிடும். அல்லது ஆவியாகிவிடும். நிலமகள் என்றும் எப்போதும் பசுமைக்கோலத்தில் விளங்கவேண்டும்.

மரம் வளர்ப்பு

மரம் வளர்ப்பு ஒரு நல்ல விவசாயப் பணி, மரங்கள் பயன்படுவதுபோல வேறு எந்த உயிர்வர்க்கமும் பயன்படுவதில்லை. புவிக்கோளத்தின் தட்ப வெட்ப நிலைகளைச் சீராகப் பராமரிக்கவும், சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாக்கவும் மரம் வளர்ப்பதே நல்லது. தூசிகளிலிருந்து பாதுகாப்பு, பேரிரைச்சலிலிருந்து பாதுகாப்பு - மரங்கள்