பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/139

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

127


இயற்கையாகத் தோன்றியது நீர். இப்பூமி முக்கால் பாகத்திற்கு மேல் கடல் நீரால் சூழப்பட்டிருந்தாலும் கடல் நீர் பயன்படும் நீர் இல்லை. குடிக்கத் தண்ணிருக்கே பற்றாக்குறை உள்ள நாடு நமது நாடு. நீர் வளம் இல்லாத நாடு என்று கூறமுடியாது. ஆனால் நீர் நிர்வாகம் போதிய அளவு இல்லை.

தண்ணிரை அளவோடு பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். நிலத்தடி நீரைப் பராமரிக்க வேண்டும். நிலத்தை உழுதல், மரங்கள் நடுதல் மூலம் நிலத்தடி நீரைப் பராமரிக்கலாம். சிலர் நினைப்பதுபோல நிலத்தை உழுவதாலும் மரங்கள் பராமரிக்கப்படுவதாலும் தண்ணிர் ஏரி, குளங்களுக்கு வராது என்பது தவறு. மரங்கள் அவற்றின் வேர்கள் வழியாகத் தேவையான தண்ணிரை எடுத்துக் கொண்டு மீதியை நிலத்திடி நீராகச் சேமிக்க உதவி செய்கின்றன. தண்ணிர் குறைவாகக் குடிக்கும் பயிர்களைத் தேர்வு செய்து பயிர் செய்வது பயனுடையது. எல்லாப் பயிர்களுக்கும் தண்ணிர் அளவுண்டு. அளவுக்கு மேலே பாய்ச்சினாலும் குடிக்காது. அந்தத் தண்ணிர் வீண்தான். தண்ணிரைப் பற்றிய மனப்பான்மை மாறுவது அவசியம். நீர் மேலாண்மை அறிவியல் வளரவேண்டும்.

காற்று

அடுத்து, காற்று! உயிர்கள் உயிர்ப்புடன் வாழ்வதற்கு முதல் தேவை காற்றே. மனிதன் பிறந்த நாள் முதல் இறக்கும் வரையில் ஓயாது சுவாசிக்கிறான். அவனுடைய முயற்சியின்றியே சுவாசிக்கிறான். இந்தக் காற்றைத் தூய்மையாகப் பேணவேண்டும். புகை, தூசி முதலியவை காற்றைத் தூய்மைக்கேடு அடையச் செய்கின்றன. தூய்மைக் கேடடைந்த காற்றை மனிதன் விலக்கிச் சுவாசிக்க இயலாது. ஆதலால், காற்றைத் தூய்மையுடையதாகப் பேணவேண்டும். ஆதலால் தூசியில்லாத சாலைகள், தெருக்கள் தேவை, இது