பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/140

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


உடனடியான தேவை. ஆனாலும் இந்தியா போன்ற நாட்டில் சாத்தியமல்ல. ஆதலால் தூசி வடிகட்டி என்று பாராட்டப் பெறும் மரங்களை வீதிகளிலும் வீடுகளைச் சுற்றியும் வளர்க்க வேண்டும். புகையில்லா அடுப்புகள் மகஞ்சூனா வந்து விட்டன. திருக்கோயில் கருவறைகளிலும் கூடக் கற்பூரம் கொளுத்துவதை விட நெய் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் வளர்ந்து வருகிறது. ஆனால், ஆலைக் கழிவுகளும் ஊர்ப்புறக் கழிவுகளும் காற்றைத் தூய்மைக் கேடு, செய்வது குறைந்த பாடில்லை. இத்துறையில் மேலும் கவனம் தேவை. குப்பை கூளங்கள், கழிவுகளை உடனுக்குடன் குழிகளில் போட்டு மூடவேண்டும். மக்களும் ஊராட்சிமன்றங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். ஆலைகளின் கழிவு காற்றில் கலக்காமல் செய்ய நிறையப் பாதுகாப்பு முறைகள் வந்துவிட்டன. இவற்றைக் கட்டாயம் பயன்படுத்தவேண்டும்.

கால்நடை

மனிதனின் தோழமை மிக்க உயிர்களில் கால்நடைகளும் அடங்கும். மரங்களைப் போலவே கால்நடைகளும் மனித வாழ்க்கைக்குத் துணை செய்வன. ஏன்? நிலம், மரங்கள் இவைகளுக்கு உரமூட்டக்கூடக் கால்நடைகளின் எருக்கள் தேவைப்படுகின்றன. ஆதலால், கால்நடைகள் மனித வாழ்க்கையில் முதலிடம் பெறுகின்றன. மனிதனின் சிறந்த உணவு பால். பசுமாடுகளைத் தரமாகப் பேணி வளர்க்க வேண்டும். பசுவை வணங்கும் வழக்கம் நாட்டில் உள்ளது. ஆனால், முறையாக வளர்ப்பதில்லை. பசு மாடுகள் வளர்ப்பு ஒரு நல்ல தொழில். ஆனால் நமது நாட்டில் இன்னமும் கால்நடைகள் வளர்ப்பு; ஒரு நல்ல தொழிலாக உருக்கொள்ளவில்லை. அன்று பசுவாகிக் கன்று ஈன 12 மாதம் அல்லது 15 மாதம் போதும். ஆனால், நமது நாட்டில் 3 ஆண்டுகள் ஆகின்றன. அதுபோலவே, ஆண்டுக்கு ஒரு கன்று அல்லது 15 மாதத்திற்கு ஒரு கன்று ஈனும். ஆனால் நமது நாட்டில் கறவை மறைவைக் காலம் சராசரி 8 மாதமாக