பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/141

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

129


இருக்கிறது. இது பொருளாதார இழப்பு. செயற்கைமுறைகளில் கருத்தரிப்புச் செய்யும் முறை வளர்ந்து வருகிறது. செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்வதிலும் கூட நமது கால்நடைப் பல்கலைக் கழகம் செபடக்ஸ் வடிகட்டுதல் என்ற முறையை ஆய்வு செய்து அறிமுகப் படுத்தியுள்ளது. இது நல்ல பயனுள்ள முறை, ஆடு மாடுகளுக்குச் சுத்தமான நல்ல தண்ணீர் கொடுக்க வேண்டும். இதுபோலத் தேவையான தீவனமும் ஆடு மாடுகளுக்குத் தரவேண்டும். பசு மாட்டுத் தீவனத்தில் பிண்ணாக்கு முதலிடம் பெறுகிறது. செலவும் குறையும்.

அதிக முதலீடும் உழைப்புமின்றி வளர்க்கப்படுவது மீன். மீன் ஒரு சிறந்த உணவு. மீன் வளர்ப்பு தண்ணீரைத் தூய்மையாக வைத்துக் கொள்ள உதவும். கால்நடை வளர்ப்பில் செம்மறி ஆடுகள் வளர்ப்பு ஒரு தொழில், வெள்ளாடுகள் ஆழ்கூள முறையில் வளர்க்கலாம். அப்படியல்லாது வெள்ளாடுகள் வளர்ப்பது விவசாயத்திற்கு உதவி செய்யாது. கால்நடைகளுக்குப் பசும்புல் நிறையத் தேவை. கால்நடை வளர்ப்பு ஒரு வேளாண்மைத்துறை, தொழில். கால்நடை வளர்ப்பில் செல்பாக்ஸ்களும் முறை கடைப்பிடிக்கப் பெறுதல் வேண்டும். மரபு, மரபியல் மாற்றங்கள் மற்றும் உணவு, மருந்து முதலிய துறைகளில் நிறைய ஆய்வுகள் நடந்துள்ளன. ஆய்வுகள் நடந்து கொண்டேயிருக்கின்றன. இந்த ஆய்வின் முடிவுகள் என்று கிராமப்புறங்களின் மாட்டுக் கொட்டில்களுக்கு வருகின்றனவோ அன்றுதான் நாடு வளரும். கால்நடை வளர்ப்பு இந்தியப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. விவசாயிகளுக்குக் கால்நடை வளர்ப்பு தவிர்க்க இயலாதது; கட்டாயத் தொழிலுமாகும்.


வேதியியல்


வேதியியல் துறையில் பல தொழில்கள் வளர்ந்து வந்துள்ளன. குறிப்பாக மனிதன் படைத்த பலவகைப்