பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

133


முன்னேற்றத்திற்குத் தடை மேலும் மனிதத் தராதரம் என்ற பெயரில் அமைந்துள்ள பிரிவினைகள்; மனிதர்கள், மனிதர்களுடன் போராடும் நிலை உருவாகிப் பொருளியல் சார்ந்த முயற்சியினை முடக்கிவிட்டது. விட்டது. ஆதலால், நமது நாட்டில் பொருளியல் வளர்ச்சி வேகம் உரியவாறு இல்லை. தனிமை உணர்வின் காரணமாகக் கூட்டு உழைப்புமுறை முறையாக வரவேற்கப்படவுமில்லை. ஒரோவழி தென்பட்டாலும் கூட்டு வாழ்க்கையில் காணப்படும் ஆர்வம் குறைவே. இதனால் நிலங்கள் துண்டாடப்பட்டுவிட்டன. இரண்டு ஏக்கருக்குக் குறைவாக உரிமை பெற்றுள்ள விவசாயிகள் பல ஆயிரக் கணக்கில் உள்ளனர். இந்த இரண்டு ஏக்கரும் கூட சிதறுண்டு கிடக்கும் நிலை. இந்த விவசாயம் கட்டுபடி ஆகுமா? ஆலோசனை செய்க, கால்நடை வளர்ப்பிலும் பொருள் புழக்கம் போலத் தோற்றம். உண்மையில் பொருளாதார இழப்பே. தரமான கால்நடைகள் வளர்ப்பு அறிமுகப்படுத்தப்படுதல் வேண்டும். இங்ஙனம் பொருள் சார்ந்த அறிவியல் வளர்ந்தால் மக்கள் வளர்வர்; நாடு வளரும்;

மருத்துவம் - சுகாதாரம்

நோயற்ற வாழ்வு தேவை. இதற்குச் சுற்றுப்புறச் சூழ்நிலைப் பாதுகாப்புத் தேவை. சுற்றுப்புறச் சூழ்நிலைப் பாதுகாப்புக்குச் சுகாதாரம் தேவை. சுகாதார வசதி பெருகினால் நோய்கள் அணுகா. மருத்துவ மனைகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியும்; கட்டுப்படுத்தலாம்.

இன்று நமது நாட்டில் மருத்துவமனைகள் பெருகி வளர்வதைப் போல சுகாதார வசதிகள் வளரவில்லை. பாதுகாக்கப்பெற்ற குடி தண்ணீர் இன்றும் பலகோடி மக்களுக்குக் கிடைக்கவில்லை. இன்று தூசியற்ற சாலைகள் இல்லை. கழிப்பறை வசதிகள் போதாமை. நல்ல சத்துணவு உண்ண வழியில்லை. இதனால் நாளும் நோய்கள் பெருகி