பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/146

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வளர்கின்றன. இவையெல்லாம் முறையாக அமையும் நாள்வரை நாட்டு மக்கள் காத்திருக்கப் போகிறார்களா? அல்லது தாங்களே செய்துகொண்டு நலமுடன் வாழப் போகிறார்களா?

எந்தத் தண்ணிரையும் கொதிக்க வைத்து வடிகட்டிக் குடித்தால் நல்லது. வீடுகளைச் சுற்றியும் வீதிகளைச் சுற்றியும் நல்ல மரங்கள் வளர்த்தால் சுத்தமான காற்றும் கிடைக்கும்; தூசி வடிகட்டியாகவும் பயன்படும். நான்கு வேப்ப மரங்கள் ஒரு குளிர் சாதனப் பெட்டிக்குச் சமம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். மரங்கள் பலவகையிலும் பயன்படக்கூடியவை. நல்ல காற்றோட்டமும் கதிரொளியும் புகுதலுக்குரியவாறு வீடுகள் கட்டப்பெறுதல் வேண்டும். வீடுகளுக்கிடையில் போதிய இடைவெளி வேண்டும். கழிவு நீர்களை அப்புறப்படுத்தி உறிஞ்சு தொட்டிகள் கட்டி அவற்றில் விட வேண்டும். கழிப்பிட வசதிகள் இல்லாத வீடுகள் கூடாது. அப்படிக் கட்ட வசதியில்லையென்றால் வார்தாமுறைக் கழிப்பிடமாவது அமைத்துக் கொள்ள வேண்டும். கழிவுகளை, குழிகளில் போட்டு மூடினால் பாதுகாப்பு: மேலும் உரமும் கிடைக்கும்.

நன்றாகச் சாப்பிடக் கற்றுக் கொள்ளவேண்டும். நமது நாட்டில் பலருக்குச் சாப்பிடத் தெரியாது. சுவைக்காக மட்டுமே சாப்பிடுகிறவர்கள் பலர் உடல் ஓர் இயந்திரம். இந்த இயந்திரத்துக்குத் தேவையான உணவு தரவேண்டும். உண்ணும்பொழுது முதலில் உடலுக்குத் தேவையான உணவுகளை உண்ணவேண்டும் அறிவியல் முறைப்படியும், அறநெறிப்படியும் எண்ணினால் புலால் உணவு அவசியமில்லை என்பதே முடிவு. தாவரவகை உணவே நல்லது. தாவர வகை உணவு நல்ல உடல் நலத்தையும் அமைதியான வாழ்க்கையையும் தரும். காய்களும் கனிகளும் சிறந்த உணவு. உணவில் அரிசியின் அளவைக் குறித்து, காய்களையும் அதிகமாகக் கொள்வது நல்லது. ஒரே அரிசி உணவு