பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/149

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

137


இருக்கிறார்கள்" என்று நினைக்கிறார்கள். இதனால் சமூக உறவுகள் பாதிக்கின்றன. ஒருவரோடு ஒருவர் இணைந்து நல்ல உறவுடன் வாழ்வது ஒர் அறிவியல் சார்ந்த முயற்சி. சாதனை என்று கூடச் சொல்லலாம். இங்ஙனம் ஊர் தோறும் ஒரிருவர் வாழ்ந்தால் கூட அற்புதங்கள் நிகழ்த்தலாம்.

அன்பு, உறவு, நம்பிக்கை, நல்லெண்ணெம் முதலியன விலைச் சரக்குகளல்ல. மனிதன் தன்னிடத்தில் வளர்த்துக் கொள்ளக்கூடிய பண்புகள். இவைகள் வளர்வதற்குத் தடையாக அமைபவை சுயநலம். சொத்து! சொத்து இன்று மக்களைப் பேயாட்டம் ஆடவைத்துள்ளது. சொத்து ஒரு கருவி என்ற அணுகுமுறை இல்லாமல் "சொத்தே வாழ்வு” என்ற கொள்கை உருப்பெற்று விட்டதால் சொத்தின் காரணமாக உடன்பிறந்தாரும் கூட பகைவர்களாகி விடுகின்றனர். ஈன்ற தாய்கூட அந்நியப்பட்டு நிற்கும் நிலை! தனி உடைமைச் சமுதாயம். பண மதிப்பீட்டுச் சமுதாயம் நிலவும் வரை இந்த மனிதக் கூட்டத்தின் போக்கு மாறாது. கூட்டுறவு சமுதாயம் தோன்றுதல் வேண்டும். உத்தரவாதம் தேவை.

சமூகவியல் அறிவு, நமது மக்களுக்கு மிகுதியும் தேவை. ஏன்? நமது மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளாகச் சாதிப் பிரிவினைகளாலும் மதப்பிரிவினைகளாலும் பிரிந்து கலகம் செய்துகொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்கள்; வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய மானுட உலகம் புதிய அறிவியல் உலகத்தில் வாழ்கிறது; வளர்கிறது. அறிவியல் உலகம் நாடுகளைக் கடந்து, கடல்களைக் கடந்து, மலைகளைக் கடந்து, புவியுருண்டையை இணைத்து இன்று வெற்றி பெற்றுள்ளது. இன்று எந்தச் சிக்கலானாலும் புவியைச் சார்ந்த சிக்கல்தான் ஆனால், நாட்டு மக்களோ பழைய பானைக்குள் தலையை விட்டுக் கொண்டு தத்துவங்கள் பேசுகின்றனர். இன்று இந்தியா புறவுலக வளர்ச்சியில் 20ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறது. ஆனால், இந்தியனின் -கு.XV.10.