பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழனின் மூளையும் உள்ளமும் காட்டுமிராண்டித் தனமாக வாழ்ந்த யுகத்திலேயே இருக்கிறது. இந்தியன் மாறவில்லை. தமிழன் மாறவில்லை. ஆதலால், இந்தியர்கள் தமிழர்கள் புத்தம்புதிய உள்ளம் பெற்று, சமூக மாந்தர்களாக விளங்க வேண்டும். எந்த நாட்டில் சமூக மனச்சாட்சி, சமூக உணர்வு, சமூக ஒழுங்கியல், சமூக ஒழுக்கவியல் சிறந்த முறையில் வளர்ந்து சிறந்த சமுதாயம் வடிவம் பெறுகிறதோ அந்த நாடுதான் வளரமுடியும் வாழமுடியும். இதற்கு இன்று ஜப்பானை உதாரணமாகப் பின்பற்றலாம். ஆயினும் உலகின் பெரும்பான்மையான நாடுகளில் - ஆப்பிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளைத் தவிர மற்ற நாடுகளிலெல்லாம் சமூகவியல் சிறப்பாக இருக்கிறது. அந் நாடுகளின் மக்கள் நாட்டுக்காக உழைக்கிறார்கள்; நாட்டுக்காக வாழ்கிறார்கள். நமது நாட்டிலோ நாட்டையே திருடி வீட்டுக்குக் கொண்டு போவதே மிகுதி. இந்த நாட்டில் எப்படி "சமூகம்" உருவாகும்?

பழகும் பாங்கியல்

மனிதன் மதிக்கப்படுதல் வேண்டும். அங்கீகரிக்கப் படுதல் வேண்டும். மனிதன் அங்கீகரிக்கப்படாதவரை சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு காண இயலாது. மனிதனை அங்கீகாரம் செய்ய, பழகும் உறவுகளே துணை செய்ய இயலும். ஒருவரோடு ஒருவர் பழகி வெற்றிகொள்ள அறிவியல் அறிவு தேவை. ஒவ்வொருவருக்கும் பலமும் உண்டு. பலவீனமும் உண்டு. குறையும் உண்டு; நிறையும் உண்டு. இவற்றில் பலவீனங்களையும், குறைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பலத்தையும் நிறையையும் எடுத்துக் கொண்டு பாராட்டி மகிழ்ந்து உறவு கொண்டாடி வளர வேண்டும்; வாழவேண்டும். பலவீனத்தையும் குறையையும் மருத்துவப் பாங்கில் அணுகி அகற்ற வேண்டும். ஒருவரோடு பழகுதலும் உறவு கொள்ளுதலும் ஒரு கலை;