பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

141


நட்பும், உறவும் கலந்த வாழ்க்கையின் ஊடே வேறு எதுவும் - பனம், பரிசு, பதவி, புகழ் ஆகிய எதுவுமே தலை காட்ட அனுமதிக்கக்கூடாது. பழக்கம், பழக்கத்திற்காகவே, உறவு, உறவுக்காகவே! வேறு எதற்காகவும் அல்ல. ஏன்? மற்றவை நட்புறவைத் தொடர்ந்து வரக்கூடியவை. வாழ்க்கையின் முதல் அன்பு, நட்பு, உறவு என்பதறிக. ஒவ்வொரு மனிதனுக்கும் குணங்கள் மாறுபடும். மாறுபட்ட குணங்களை அங்கீகரித்துப் பழகும் பாங்கிருந்தால்தான் நட்பு வளரும். உறவில் ஐயப்பாடு தலைகாட்டக்கூடாது. இழப்பைவிட ஐயப்பாடு - சந்தேகம் கொடிது, ஆதலால் நட்புறவுக்கு நம்பிக்கை அடிப்படை கர்ணன், துரியோதனன் மனைவி விளையாடும் காட்சியை வில்லிப்புத்துரார் எடுத்துக் காட்டுவது உணர்க. சந்தேகம் ஒரு தீமை, சந்தேகம் எந்த ஒரு நன்மையும் தராது. பாதுகாக்கவும் செய்யாது. ஐயம் வேறு; ஆய்வு வேறு. சிலர் ஆய்வையே ஐயம் என்று கருதுகிறார்கள். இது பிழை. ஆய்வு, வளர்ச்சியின்பாற்பட்டது.

நல்லெண்ணம் வளர வேண்டும். நல்லெண்ணங்களாலேயே நட்பு உரம் பெறும். வாழ்க்கை ஆக்கம் பெறும். கெட்டவர்களுக்கு நல்லனவும் தீயனவாம். தீயனவும் நல்லனவாம். அதாவது நல்லது சொன்னால் - செய்தால்கூட நம்பமாட்டார்கள். இதில் ஏதோ சூதிருக்கிறது என்பர். இதற்குக் காரணம் பரஸ்பர நம்பிக்கையும் நல்லெண்ணமும் இல்லை என்பது தான். நம்பினார் கெடுவதில்லை. மனிதன் நம்பிக்கையோடும் நல்லெண்ணத்தோடும் வாழ்ந்தால் எவராலும் எந்தக் கேடும் செய்ய இயலாது. பாதிப்புக்களும் ஏற்படாது.

நட்புறவுகளுக்கு அன்பு, நம்பிக்கை, நல்லெண்ணம் இவற்றைத் தொடர்ந்து மண்ணின் பண்பும், மறக்கும் பண்பும் தேவை. "நன்றல்லது அன்றே மறப்பது நன்று" என்று திருக்குறள் கூறியது. மன்னித்தல் என்பது அருட்பண்பு. மன்னிக்கும் பண்புக்கு இணை இந்த உலகில் இல்லை. "அறியாமல்