பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/154

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

142

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செய்கிறார்கள் மன்னித்து விடுக" என்ற ஏசுவின் பிரார்த்தனையை ஓர்க மறத்தல் நிகழ்ந்தால்தான் மன்னிப்புக்குப் பொருள் உண்டு, பயன் உண்டு. என்று இப்பண்புகள் எல்லாம் நினைத்து மகிழக்கூடியவையாகி விட்டன என்று நம் மக்கள் வாழ்க்கையில் இடம் பெறும்?

அரசியல்

இந்த நூற்றாண்டில் ஒர் அறிவியல் பற்றிப் பேசாது விட்டால் சுற்றுத் துறைபோய அறிஞருலகம் மன்னிக்காது. அது எந்த அறிவியல்? அரசியல் என்பது ஒர் அறிவியலேயாம். நமது மக்களில் பலருக்கு இந்த அறிவியல் இல்லை. இன்று நாம் காண்பது கட்சிகள்! கொடிகள்! தலைவரைப் புகழ்தல்! கட்சிக்காரரே சுற்றம்! நமது நாட்டு மக்களோ தேர்தலில் வாக்களிப்பதை ஒரு தீர்ாக் கடமையாகச் செய்து முடிக்கின்றனர். அரசியல் அறிவு இல்லாது போனாலும் மக்கள், கட்சிகளின் போக்கில் விருப்பு வெறுப்புக்களால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது தேர்தல் முடிவுகளில் புலனாகிறது. விருப்பு - வெறுப்புக்கள் மட்டுமே அவற்றின்பாற்பட்ட உணர்ச்சிகள் மட்டுமே நிரந்தரத் தீர்வைத் தந்துவிடமுடியாது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடிய வகையில் மக்களாட்சி அமையத்தக்க வகையில் உள்ள கொள்கை, கோட்பாடு உடையவர்களை மக்கள் ஆதரித்து ஆட்சியில் அமர்த்த வேண்டும். ஆட்சியின் திட்டங்கள், செயற்பாடுகள் அவற்றில் உள்ள குற்றங்குறைகள் முதலியவற்றை மக்கள் கூர்ந்து கவனித்து விமர்சனம் செய்யும் அறிவைப் பெற்றால்தான் நல்ல அரசு அமையும். மனிதன் பயமின்றிச் சுதந்திரமாகப் பேசவும், எழுதவும், வாழவும் வாய்ப்பு வேண்டும்!

மனிதகுலம் பல நூறாயிரம் ஆண்டுகள் வாழ்ந்த பிறகே தங்களுக்கிடையில் இருந்த பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண அரசியலைக் கண்டனர். அரசியல் மனித உறவுகள், உரிமை