பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கல்வியியல் கட்டுரைகள்

143


களின் எல்லைகளை நிர்ணயிப்பது, மக்கள் தங்களைத் தாங்களே மேலாண்மை செய்ய அரசைக் கண்டனர். காலப் போக்கில் அரசைக் கண்டனர், காலப்போக்கில் அரசியல் பலவாகத் தோன்றியது. இன்று பரவலாக இருக்கும் அரசுகளை முடியரசு, குடியரசு என்பர். முடியரசு மன்னராட்சி. மக்கள் முடியாட்சியுடன் போராடி அதனை அகற்றிக் குடியரசு கண்டனர். இன்று தரமான நலம் பயக்கும் குடியரசு விரல் விட்டு எண்ணத்தக்கவை சிலவேயாம். குடியரசில் வாக்காளர்கள் தரம் கூடினால்தான் குடியரசு சிறப்பாக அமையும். சில சமயங்களில் குடியரசு, முடியரசைவிட மோசமாகப் போய்விடுவதைக் கண்டிருக்கிறோம்.

நமது நாட்டுக் குடியரசு வளரவேண்டும். மேலும் வளர வேண்டும். தேர்தலில் ஆதிக்கம் வகிக்கும் பணம், சாதி, மதம் இவைகளை அறவே நீக்கவேண்டும். பண ஆதிக்கத்தை அரசும் தேர்தல் ஆணையமும் எளிதில் நீக்கலாம். அதாவது, தேர்தல் செலவை அரசே ஏற்கவேண்டும். அரசியற் கட்சிகளின் கணக்குகள் தணிக்கை செய்யப் பெறுதல் வேண்டும். அடுத்து, சாதி மதங்களின் ஆதிக்கத்தைத் தேர்தலிலிருந்து அகற்ற அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். பெரும்பான்மையான சாதியை, மதத்தைச் சேர்ந்தவர்களை அந்தந்தத் தொகுதிகளில் நிறுத்துவதற்குச் சில நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டும். நமது அரசு சமயச் சார்பற்ற அரசு. ஆதலால் சமயச் சார்புடைய கட்சிகளை அரசியல் கட்சிகளாகத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக்கூடாது.

தேர்தல் அறிக்கைகளை, தேர்தல் அறிவித்த 15 நாளில் தயார் செய்து மூன்று படிகள் முத்திரை வைத்த உறையில் வைத்து, தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் தந்துவிட வேண்டும். தேர்தல் ஆணையம் ஒரு குறிப்பிட்ட நாளில் அனைத்துக் கட்சிகளின் முன்பாகத் திறந்து தேர்தல் ஆணையத்தின் முத்திரை வைத்துத் தரும் தேர்தல் அறிக்கையினைக்