பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/160

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


அனுபவத்தால் எடுத்துக்கொள்ளக்கூடியது. இன்றைக்கு நமது சமய உலகில் சமய ஒழுக்கம் இலைமறை காய்மறையாகவே இருக்கிறது. மாணிக்கவாசகர் பெண்ணின் விளையாட்டு - தொழில் தொடர்பில் திருப்பொன்னுரசல், திருப்பொற் சுண்ணம், அம்மானை முதலிய பல பதிகங்களைப் பாடியுள்ளார். வீட்டில் கோவிலின் சூழல் அமையுமானால் திருக்கோவில்கள் திருவருளின் பெட்டகமாகத் திகழும்.

சமயத் துறையில் பெண்களுக்குப் பெரும் பங்குண்டு. பெண்கள் எதையும் சீக்கிரமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆண்கள் அப்படியல்ல. உணர்ச்சி வேகத்தில் ஒன்றைச் சட்டென்று ஒத்துக் கொள்வார்கள் - உதறித் தள்ளுவதிலும் அப்படித்தான்.

அன்று, பாண்டிமாநாட்டை ஆண்ட மன்னனே வழிவழி வாழ்ந்த சைவத்தைவிட்டுச் சமண மதத்திற்கு மாறினான்-ஆனால், மங்கையர்க்கரசி மாறவில்லை. சொந்தக் குடும்ப வாழ்க்கையின் நலன்களை - குலத்தை - குடும்பத்தை வளர்க்கின்ற தெய்வத்தைத்தான் குல தெய்வம் என்கிறோம். சேக்கிழார் பெருமான் மங்கையர்க்கரசியைத் தவிர வேறு எவரையும் "குலதெய்வம்" என்று பாராட்டவில்லை. மங்கையர்க்கரசியை "எங்கள் குலதெய்வம்" என்று பெருமை யோடு பேசுகின்றார். சிவநெறியின் பெருமை சிறப்பு மங்கையர்க்கரசிக்கு உண்டு.

பொதுவாக ஐந்து ஆடவர்களை மதம் மாற்றுவதை விட ஒரு பெண்ணை மதமாற்றுவது சிறந்தது என்பது விவிலிய மதத்தினரின் கோட்பாடு, பெண்களிடத்துப் பரவிய கொள்கை மேலும் மேலும் வளரும் என்ற நம்பிக்கையே இதற்குக் காரணம். மாணிக்கவாசகரும் இந்தப் பேருண்மையை உணர்ந்து தான் பாவையர்க்குப் பாடினார். பாவை காட்டும் பண்பட்ட வழியில் சென்றால் நாடு நலமுறும் பாவையர்க்கே பாடினார் என்பதில் இன்னொரு