பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/161

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

149


தத்துவப் பொருளும் உண்டு. உலகத்திற்கு நாயகன் ஒருவன் - அவனே இறைவன். அவனை ஆன்ம நாயகன் என்பார்கள். ஏனைய உயிர்கள் அனைத்தும் நாயகியர் என்பது வழக்கு.

திருப்பெருந்துறை மண்ணில் இன்றும் ஞானத்தின் தேக்கம், இருக்கிறது "திருப்பெருந்துறை என்று சொன்னேன் - என் பிறப்புறுத்தேன்" என்று பேசுகின்றார். நாட்டின் போக்கு - சமுதாயத்தின் பலவீனம் இவற்றைத் தெளிவாகக் கணக்கில் எடுத்து வைத்துக் கொண்டு பாடினார் மாணிக்க வாசகர் "என்னை ஒரு வார்த்தை உட்படுத்தி ஆண்டாய்” என்று பாடிநின்றார். சொல்லாமற் சொல்லிக் குறிப்பால் உணர்த்தி ஆட்கொள்ளும் உயரிய நெறி நமது சிவநெறி.

நான் மாணிக்கவாசகரை எம்பெருமான் என்றே குறிப்பிடுகின்றேன்; அழைக்கின்றேன். "அறிவினாற் சிவனே ஆனவன்” என்று பாராட்டப்பெற்றவர் அல்லவா மாணிக்க வாசகர். சிவநெறியில் அடியார்களுக்குச் சிறப்புண்டு. சிவ பூசை செய்தாலும் செய்யலாம். திருவாசக பூசை பண்ணினாலும் பண்ணலாம். இரண்டும் ஒரு பயனைத்தரும் என்பது ஆன்றோர் வழக்கு.

எம்பெருமான் இறைவனைப் பார்க்கின்ற காட்சி தனிச்சிறப்பு வாய்ந்தது.

"ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியே!” என்கிறார். "சோதியே! சுடரே! சூழ் ஒளி விளக்கே!" என்று பேசுகிறார். இறைக் காட்சியில் எப்போதும் வண்ணம்தான் முதலில் தோன்றும். வண்ணம்தான் அதுகாட்டி வடிவு காட்டி மலர்க் கழல்கள் அவைகாட்டி.." என்கிறார். "கண்ணாலும் யானும் கண்டேன் காண்க" என்கிறார். "புவனியில் சேவடி தீண்டினன் காண்க” என்று பேசுகின்றார்.

பொதுவாக மனிதக் காட்சிக்கும் இறைக்காட்சிக்கும் வேறுபாடு உண்டு. மனிதக் காட்சியில் வடிவம் முதலில் தோன்றும். பின்னர் உறுப்பு நலன் தோன்றும். அண்மையில்