பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/173

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

161


பெருக்கிக் கொண்டனர். புறத்தால் தாங்கும் வேடங்கள் பலவற்றைக் கைக்கொண்டு, அவற்றின் மூலமும் சிந்தனையைத் திருத்திச் சிவத்தில் ஆழ்த்தினர். காலப்போக்கில் சமய வாழ்வு சிதைந்துகொண்டே வந்தது. சமயம் வேறு, வாழ்க்கை வேறு என்ற புல்லிய உணர்ச்சி தலையெடுத்து வளர்ந்தது. வாழ்க்கையோடு ஒட்டிய சமயம் சடங்குச் சமயமாக மாறிவிட்டது. அகத்தைத் துய்மைப் படுத்தச் செய்யப் பெறும் சடங்குகள், உள்ளத் தோய்வுடன் செய்யப் பெறாமையினால் வழிபாடுகளும் சடங்குகளும் நெஞ்சத்திற் கலக்கவில்லை. இருதயத்தில் ஒலிக்கவேண்டிய சமயம் வாயளவிலே ஒலிக்கும் நிலைக்கு வந்து விட்டது. உண்மைச் சமய வாழ்வு அருகிக்கொண்டே வந்தது. அதனால் பண்பாடும் சிதைந்து சாதி முதலியப் போலிப் பிளவு மனப்பான்மைகளும் உருவெடுத்து விட்டன.

ஆனால் இப்பொழுது சில ஆண்டுகளாக எங்கும் ஒரு மாற்றம். சமயத்துறையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. சமயச் சார்பற்ற வாழ்க்கை சாரமற்ற வாழ்க்கை என்று மக்கள் நம்புகின்ற நிலைக்கு வந்துள்ளனர். வாழ்க்கையோடு ஒன்றுபட்ட சமய வாழ்வை விரும்புகின்ற வேட்கையும் மலர்ந்திருக்கிறது. எங்கும் சமயத்தின் பேச்சு, ஊர்தோறும் கூட்டு வழிபாட்டு இயக்கங்களும் பொதுப் பிரார்த்தனைகளும் உண்டாகிக் கொண்டிருக்கின்றன.

சமயத்தால் எழுந்தவை திருமடங்கள். சமயத்துக் காகவே வாழும் தகுதியுமுடையன திருமடங்கள். சமயக் கொள்கையைப் பேணிக் காத்து-மக்களை அருள் நெறியில் ஆற்றுப்படுத்தும் கடமையை மேற்கொண்டவைகளே திருமடங்கள். சன்மார்க்க சாலைகளாக-தமிழ் வளர்க்கும் பண்ணைகளாக விளங்கியவை-விளங்க வேண்டியவை திருமடங்கள். நல்லூழின்மையின் காரணமாக இந்த நிலை சிலகாலம் மாறுபட்டிருந்தது என்பதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டியிருக்கிறது. இப்பொழுது சில ஆண்டுகளாக