பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/174

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

162

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மடாதிபதிகளின் வாழ்க்கையிலும் மாற்றம்; அவர்களும் பணியில் ஈடுபட்டுவிட்டார்கள்.

சமய நூல்கள் எல்லாம் அச்சு வாகனமேறி வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமய நூல்களின் பயிற்சியிற் சிறந்தார்க்குப் பரிசுகள் வழங்கி ஊக்கமும் உணர்வும் ஊட்டப் பெறுகிறது. கல்வி நிலையங்கள் பல கண்டு, அவற்றின் மூலம் அறிவோடு அருளுணர்ச்சியும் தரப்படுகிறது. வீதிகளிலும் வீடுகளிலும் நின்று சமயக் கொள்கைகளைப் பரப்புகின்றனர். சேரிகளிலும் - சிறைகளிலும் கூடப் புகுந்து தமது பணிகளைச் செய்யத் தலைப்பட்டு விட்டனர். நாட்டின் வரலாற்றில், சமயத்தில் மடாதிபதிகளால் ஏற்பட்ட இம்மறுமலர்ச்சி வரவேற்கத் தக்கது-வாழ்த்தத் தக்கது.

தக்க அறிவு சான்ற பெருமக்களின் தனி வாழ்விலும் இன்று ஒரு மாற்றம் காண்கிறது. ஆங்கிலம் படித்து ஊழியம் பார்த்து ஊதியம் பெறுதலிலேயே ஈடுபட்டிருக்கும் மனநிலை இன்று பலரிடத்தில் இல்லை. அவர்களும் அருள்நெறி வளர்க்கும் பணியில் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த முறையில் சமயப் பணி செய்து வருகின்றார்கள். இத்தகு பெருமக்களால் தமிழகத்தின் சமயத் துறையில் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி மறக்க முடியாததொன்று.

தமிழ் நாட்டில் தமிழ்ப் பெருமக்களது உணர்வில் எழுந்தவை ஆலயங்கள். முத்தமிழ் பயிலும் பள்ளிகளே தேவாலயங்கள். தமிழ் பயிலவேண்டிய ஆலயத்தில் தமிழ் மறக்கப்பட்டது. வேற்றுமொழி இடம் பெற்று வேரூன்றி விட்டது. கடவுளோடு உறவாடிய கன்னித் தமிழ் என்று வரலாறு பேசுவர். நால்வரின் தமிழ் மறையே நானிலத்தை வாழ்விக்கும் என்று எடுத்துப் பேசுவர். எனினும் ஆலயத்தில் தமிழுக்கு இடங்கொடுக்கா திருந்தனர். நெஞ்சந் தொடாத மொழியில் வழிபாடு செய்வது பழக்கத்தின் மூலம் வழக்க மாகிவிட்டது. தமிழ் அன்பர்களுக்கும் தமிழ்த் தொண்டர்