பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/176

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழகம் அருள் வெள்ளம் பொங்கித் ததும்பும் திருநாடாக விளங்கப் போகிறது என்று நமது இதயம் சொல்லுகிறது.

3. இறைவன்

மனித உயிர்களுக்கு எப்பொழுதும் நல்ல சமயம் தான். சிலருக்கு கொஞ்சம் முன்னே நடக்கலாம்-சிலருக்குக் கொஞ்சம் பின்னே நடக்கலாம். அவ்வளவுதான்.

சமாதானம் செய்து கொள்வதில் நம்மவர்கள் மிகவும் கெட்டிக்காரர்கள், இனம், மொழி, நாகரிகம் இவைகளையெல்லாம் கடந்து நமது சமயத்தைக் கொண்டு போயிருந்தால் அது இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கும்.

வாழ்க்கைக்கு ஒரு நோக்கு இருக்கிறது-உயிர்ப் பொருளாக இருந்தாலும் உயிரில் பொருளாக இருந்தாலும் அறிவில்லாதவைகளாக இருந்தாலும் அதன் அசைவில் ஒரு நோக்கு-இலட்சியம் இருக்கிறது, பொருள், வாழ்க்கையின் இலட்சியமாக இருந்தால் அதைப் பெற்றுவிட்டபோது அமைதிபெற வேண்டும். பெறுகிறோமா? அறிவு, வாழ்க்கையின் இலட்சியமாக இருந்தால் அதைப் பெற்று அமைதி பெறுகிறோமா? புகழ், வாழ்க்கையின் இலட்சியமாக இருந்தால் அது கிடைத்ததும் அமைதி பெறுகிறோமா? இல்லையே!

மனிதன் வாழத்தான் பிறந்திருக்கிறான்-அவன் தன்னலக்காரனாக இருந்தால்கூட எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால் வீட்டிற்குச் சுவர், வயலுக்கு வேலி, ஆற்றுக்குக் கரை போல தன்னலத்திற்கு ஓர் எல்லை வைத்துக் கொள்ள வேண்டும்.

"மனமெனும் குரங்கே" என்றார் இராமலிங்கர். இந்தக் காலத்திற்கு அதுகூட அவ்வளவு பொருத்தமானதாக நமக்குத் தோன்றவில்லை. குரங்கு ஒரு கொம்பிலிருந்து இன்னொரு கொம்பிற்குத் தாவுவும்போது முன்பு பிடித்துக்கொண்டிருந்த