பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


போக்குகின்றான். அதற்காக இறைவன் நம்மைப் படைத்தான் என்று சொல்ல முடியுமா? "இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ?” என்றார் அப்பரடிகள். இறைவன் அந்தப் பிறவிப் பயத்தை - பிணியைப் போக்குகிறான். மனித சமுதாயம் பரிபூரணத்தை நோக்கிப் போவதுதான் வாழ்க்கை என்பது, அவனை முழு மனிதனாக ஆக்குவதே சமயம். உப்பு, புளி, மிளகாய், கத்தரிக்காய் எல்லாம் மூட்டை மூட்டையாக இருந்தாலும் அவற்றை அப்படியே எப்படிச் சாப்பிட முடியும்? அதை நாக்குக்கும் மூக்குக்கும் சுவையான வகையில் சமைத்துத் தானே சாப்பிட முடியும்; அப்படிச் சமைத்துக் கொடுப்பதுதான் சமையல். அதுபோல மனித வாழ்க்கையை ஒழுங்குபடுத்துவதுதான் சமயம்.

கடவுள் என்பதன் மறுபொருள் பரிபூரணம் என்பது தான். இறைவனை 'குறைவிலா நிலவே! கோதிலா அமுதே' என்கிறார் மாணிக்கவாசகர்.

கடவுள் பயங்கரப்பொருள் அல்ல-கடவுளிடத்து நமக்குப் பரிவும் பக்தியும் வேண்டுமே தவிர பயமும் பக்தியும் இருத்தல் கூடாது. ஆண்டவனைப் பார்த்து அடிமை பயப்படுவதுபோல இறைவனைப் பார்த்து மனிதன் பயப்பட வேண்டியதில்லை.

எண்ணத்தால் சிந்தனையால் நாம் செய்த தீமைகளை நன்மைகளை நாம்தான் அனுபவிக்க வேண்டும் என்பது மனித ஒழுக்க நியதி. இதை உணர்த்தாத நிலையில் மனிதன் எண்ணற்ற ஒழுக்கக் கேடுகளைச் செய்து கொண்டேதான் இருப்பான். அதை உணர்த்துவதற்குத்தானே சமயம்.

நமது சமயம், கடவுளை வாழ்க்கைப் பொருளாக-வாழ் முதலாக-வாழ்வுப் பொருளாகக் கண்டது.

திருஞான சம்பந்தர் தெருவழியே நடந்து சென்றபோது சிவமணம் கமழ்ந்தது. எண்ணத்தில் சிவமணம் ஏற்பட்டு அது