பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/183

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

171


என்பது சிவஞானபோதம். இச் சூத்திரக் கருத்துரையில் "கடவுளை முதலாக உடைத்து இவ்வுலகம்” எனக் கூறினரேனும், காணப்பட்ட உலகைக் கொண்டே கடவுளுண்மை துணிய வேண்டுத்ல் நோக்கிச் சூத்திரத்தில் "தோற்றிய திதியே” என உலகத்தை முன்னரும் "ஒடுங்கி உளதாம்” எனக் கடவுளைப் பின்னரும் கூறினார்.

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"

என்று திருவள்ளுவரும் ஒதுகின்றார்.

இக்குறளுக்கு, "காணப்பட்ட உலகத்தால் காணப் படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், ஆதிபகவன் முதற்றே உலகு என உலகின்மேல் வைத்துக் கூறினார்" என்று பரிமேலழகர் எழுதிய உரையும் உணரத்தக்கது. இங்ங்னம் முதல்வன் உலகின் காரணனாக-நிற்கின்ற மாட்சிமையை அப்பர் பெருமான், -

"தானலாது உலகம் இல்லை”
"எல்லா உலகமும் ஆனாய் நீயே"
"உலகுக் கெல்லாம் வித்தகன் காண்"

என்றெல்லாம் கூறிக் காட்டுகின்றார்கள்.

5. கொற்றக் குடை தாழ்க

தமிழ் நாட்டின் வரலாற்றிலும் தமிழ் மொழியின் வரலாற்றிலும் தலைசிறந்தது. சங்க காலம். தமிழிலக்கியங்கள் தோன்றி வளர்ந்தது இக்காலத்திலேயாம். சங்க இலக்கியங்கள் தமிழ் மக்களது வாழ்க்கையினின்று எழுந்தன. தமிழினத்தின் வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்து கொள்ளத் துணையாய் இருப்பவை சங்க இலக்கியங்களேயாம். தமிழ் மக்கள் அகத்துறை, புறத்துறை ஆகிய இரு துறைகளிலும்