பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/200

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



"உலகத்தார் உண்டுஎன்பது இல்லென்பான், வையத்து
அலகையா வைக்கப் படும்"

என்பது திருக்குறள், இவ்வகையினரை வாதவூரர் மூர்க்கர் என்றும், ஆணலாதவர் என்றும், கூறுகிறார். நாத்திகர்களை,

"ஆத்த மானார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர்"

என்று குறிக்கின்றார். அவர்களுடைய இணக்கம் தீயது என்பதை,

"முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை'

என்றும்,

"வாணிலாங் கண்கள் சோர
வாழ்த்திநின் றேத்த மாட்டா
ஆணலா தவரைக் கண்டால்
அம்மநாம் அஞ்சு மாறே”

என்று கூறி விளக்குகின்றார்.

வானுலக வாழ்வினும் மேலாயதே வீட்டுலக வாழ்வு என்பது வள்ளுவர் கருத்தே இக்கருத்து சைவத் திருமுறைகளிலும் சிறப்பாக அடிகளின் வாசகத்திலும் பரந்துகிடக்கின்றது.

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்"

என்று வானுலக வாழ்வையும்,

"யானென தென்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும்”

என்று விட்டின்பத்தையும் குறிக்கின்றார் வள்ளுவர். 'யான்' என்ற அகப்பற்றும் எனது என்ற புறப்பற்றும் அழிதலே