பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ருந்த சமுதாயத்தைச் சாதி வேற்றுமையற்ற சமுதாயமாக்க முயல்கிறார்; மெள்ள சமுதாயத்தை நகர்த்துகிறார். சுந்தரருக்குக் கலப்புத் திருமணத்தைச் செய்து வைப்பதில் சிவபெருமான் ஈடுபட்ட வரலாற்றைச் சுவைப்படக் கூறுகின்றார். சுந்தரர், பிறப்பால் ஆதிசைவம், வளர்ப்பால் மன்னர் குலம்; முதல் மணம் முடிந்தது, உருத்திர காரிகையர் குலம்; இரண்டாவது திருமணம் வேளாளர் குலம். இங்ங்னம் சாதிகள் கலப்பை, நயம்பட எந்தவிதமான கிளர்ச்சியுமின்றி அறநிலையிலேயே சேக்கிழார் பெரிய புராணத்தில் செய்து காட்டுகிறார். இங்ஙனம், ஒரு காலத்தில்-தமிழகத்தில் அமைதியாகச் சாதி ஒழிப்பு இயக்கம் நடைபெற்றது; வெற்றியும் பெற்று விளங்கியது. ஆனால், தமிழகம் இத்தகைய வரலாற்று நிகழ்வை தொடர்ந்து கடைப்பிடிக்கவில்லை. இன்றைய தமிழகத்தில் சாதிகளைத் தவிர வேறு என்ன இருக்கிறது?

சேக்கிழார், திருஞானசம்பந்தர் - திருநீலகண்டயாழ்ப்பாணர், திருஞானசம்பந்தர்-திருநாவுக்கரசர், திருநாவுக்கரசர் அப்பூதியடிகள் ஆகியோர் உறவு நிலைகளை விளக்கும் இடங்கள் உணர்வைத் தொட்டு வளர்க்கக் கூடியன. திருப்புகலூரில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், முருகநாயனார் ஆகிய மூவரும் ஒன்று கூடுகின்றனர்; கூடிக் கலந்து உண்டு பேசி மகிழ்கின்றனர். சேக்கிழார். இதனை உடனுறைவின் பயன்பெற்றார் என்று அழகுறப் பேசுகிறார்.

சேக்கிழார் விலக்கிய தீண்டாமையும், நீக்கிய சாதி வேற்றுமைகளும் மீண்டும் தமிழகத்தை வருத்துவது சேக்கிழார் செந்நெறிக்கு உடன்பாடன்று. சாதிவேற்றுமைகளற்ற சமுதாயம் காண்பதே சேக்கிழார் செந்நெறிக்குரிய பயன். காளத்தியப்பனைக் கண்ணப்பர் ஊனெலாம் நின்றுருகும் அன்பால் அருச்சித்த காட்சியைச் சேக்கிழார் என்பையும் உருக்கும் தமிழில் எடுத்துக் கூறுகிறார். இன்று எங்கே கண்ணப்பர்கள்! ஏன், கருவறை சாத்தப்பட்டது? கருவறை ஒரு குலத்தாருக்கே உடைமையானது எப்படி? இது சேக்கிழார் செந்நெறிக்கு அடுக்குமா? சாதாரணமான மக்கள்