பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/218

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கருதுகிறேன். அப்படிக் கருதவதில் தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இறைவனின் பெரிய நாடகத்தில் அருணகிரியார் ஒரு சிறந்த பாத்திரத்தை ஏற்றிருந்தார். வாழ்க்கையின் எல்லாக் கோணங்களையும் ஒழுங்காக-உயிருணர்ச்சிகளுக்குப் படும்படியாக - அவர் செய்த தவறுகளை மற்றவர்கள் செய்யும்போது அவர்கள் கண்களிலிருந்து இரண்டு சொட்டுக் கண்ணீர் வரும்படியாகச் சொல்லியிருக்கிறார். அருணகிரியின் பாடலுக்கும், மாணிக்கவாசகரின் பாடலுக்கும் தான் படிக்கின்றவர்களை அழ வைக்கும் சக்தியுண்டு.

அருணகிரியார் அழுது அழுது பாடினார்-நம்மையும் அழ வைக்கிறார். அவர் பாடிய காலத்தில் அழுது கொண்டே பாடினார். இன்று நாம் அவற்றைப் பாடும் போது அழு கிறோம். அன்று ஆழ்கடலில் மூழ்கி மூச்சடக்கி முத்தெடுத்த பெருமகன் அருண்கிரியார் என்றோம். அப்படி அவர் முத்தெடுத்த முன்பு பாடியது அலங்காரம். முத்தெடுத்த பின்பு பாடியது அநுபூதி.

செய்முறைக் கல்வி தமிழரிடம் வளர்ந்திருந்த அளவிற்கு வேறு எவரிடமும் வளர்ந்திருந்ததாக நாம் அறிய முடியவில்லை. காட்சியிலேயே பாடஞ் சொல்லிக் கொடுக்கும் முறை தமிழனுக்குத்தான் மிகுதியும் உண்டு.

நடராசப் பெருமான் தெற்குப் புறமாகப் பார்த்து ஆடிக்கொண்டிருக்கிறார். அவர் ஏன் தெற்கு புறமாகப் பார்த்து ஆடிக்கொண்டிருக்கிறார் என்பதற்குப் பதில் கூறுவது போல் கூறுகிறார். "உடலுக்கும் உயிருக்கும் உண வாகத் தென்றலும் தென் தமிழும் தெற்கில்தானே உண்டு” என்று, அதுமட்டுமா? சொல்லுவதைக் கேட்பவர்களும் தமிழகத்திலேதானேயுண்டு.

நம் நாட்டுச் சிறுவர் சிறுமியர்களுக்கு அருச்சனைக்காசு எவ்வளவு என்று நாம் சொல்லிக் கொடுத்திருக்