பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/222

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொருள்! ஆனால், அந்தப் பழம் பொருளே ஆன்மாக்களின் அனுபவத்தைக் குறிக்கோளாகக் கொண்டு ஆன்மாக்களுக்கு ஏற்றவகையில் ஆன்மாக்கள் வாழும் காலம், தேசம் ஆகிய சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் ஆன்மாக்களின் இயல்பான புத்துணர்வு, விருப்பார்வத்திற்கு ஏற்பவும் எதிர் வரும் காலங்களின் புதுமையாகவும் விளங்குகின்றது. இறைவன் மாறிவரும் காலம், தேசம், பழக்கவழக்கங்களுக்குள் கலந்து நின்று அவையேயாகி அருள்புரிகின்றார் என்பார் தாயுமானார்.

"காலமொடு தேசவர்த்த மானம் ஆதி
கலந்துநின்ற நிலைவாழி! கருணை வாழி"

என்பது தாயுமானார் வாக்கு

"தொன்மையவாம் எனும்எவையும் நன்றாகா இன்று
தோன்றியநூல் எனும் எவையும் தீதாகா"

(சிவப்பிரகாசம் 12)

என்ற சாத்திர நூல் கூறம்.

தமிழ் இலக்கண மரபு.

"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே"

(நன்னூல் 462)

என்பதாகும். பழையன தாமே அழியும் என்றும் புதியன அந்த இடத்தைப் பிடிக்கும் என்றும் விளக்கப் பெறும் கருத்து ஒரு வரலாற்று உண்மையாகும். ஏன்? இறந்தது விலக்கலும் எதிரது போற்றலும் வாழ்வியல் நெறி ஆம்! காலத்தொடு கலந்து வாரா நெறிகளால் யாது பயன்?

2

இன்று எங்குப் பார்த்தாலும் வேற்றுமைகள் வலியுறுத்தப்படுகின்றன. முரண்பாடுகள் மோதல்களாகி விடு