பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/225

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

213


எதிர்க்கும்! உன்னைக் கொல்லலாம்! அஞ்சற்க! துணிவோடு நில்! கடந்தகால வரலாற்றைக் கூர்ந்து கவனித்துப்பார்!

எதிர்ப்புக்களைச் சந்தித்து உயிர்துறந்தவர்களே வெற்றி பெற்றுள்ளனர். அவர்களே இன்றும் வாழ்கின்றனர்.

உயிர்ப்புள்ளோர், உயிர்ப்புடன் வாழ்வை இயக்குவோர் எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சார்! உயிர்ப்புள்ள மனிதனுக்கு ஊக்கம் அதிகம் ஆதலால் உயிர்ப்புடன் வாழ்! - இதுவே விவேகானந்தர் அறிவுரை.

3. கர்மபலன்

நமது நாட்டு மக்களில் பெரும்பாலோர் தலைமுறை தலைமுறையாக ஏழ்மையில் கிடந்து உழல்கின்றனர். பஞ்சத்திலும் பட்டினியிலும் செத்தோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. அதுமட்டுமா? போதிய நல்லுணவு இன்மையால் நாளும் செத்துக் கொண்டிருக்கும் மக்கள் ஏராளம் ! பச்சிளங்குழந்தைகளின் சாவுகள் எழுதிக் காட்ட இயலாதன. ஒரு வீட்டில் வாழ்கிறார்கள். பக்கத்து வீட்டில் சாகிறார்கள், வயிற்றுக்கு வெறும் சோறு கிடைக்காமல் சாகிறார்கள். இந்தியாவின் இந்தத் துன்பியல் வரலாறு வளர்ந்து வருகிறது. கடவுள் அவதாரங்கள் நடந்தும் கூட இந்த நாட்டின் ஏழ்மையை அகற்ற முடியவில்லை! ஐயோ, பாவம். சிவபிரான் மண்ணுலகிற்கு வந்தபோது கூட ஏழைப்பிட்டு வாணிச்சியின் உதிர்ந்த பிட்டுதான் அவனுக்குக் கிடைத்தது. இது இந்த நாட்டின் தலைவிதி!

நாடு விடுதலை பெற்ற பிறகும் சராசரி இந்தியனுக்கு எல்லாம் கிடைக்கவில்லை. இல்லை, இல்லை! எதுவும் கிடைக்கவில்லை. இந்த நாட்டு மகக்ளில் சரிபாதிப் பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ்தான்! ஏன் இந்த அவலம்? நமது மக்களுக்கு, ஏன் இந்த வறுமை? ஏழ்மை? என்று சிந்திக்கத் துணிவில்லை. ஏழ்மையும் இழிவையும் அவமானத்தையும்