பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/227

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

215


தான் - ஜீவ சத்து தான் பெரிய ஆலமரமாக வளர்கிறது. விதை பெரிய மரமாக வளர்ந்ததற்குக் காற்று, கதிரவன் தரும் சூடு, தண்ணீர் ஆகியவை துணையேயாம், வளர்ச்சி, வித்தின் உயிர்ப்பு. அதுபோல், நமது நாடு வளர வேண்டும். முதலில் நாம் வளர வேண்டும். நமக்கு நம்மிடத்தில் நம்பிக்கை வளர வேண்டும்.துணிவு வேண்டும். புத்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். நாம் வளராமல் நமது விதியை நாம் ஆளாமல் எப்படி நாட்டை ஆளுவது? வளர்ப்பது? இவை நடைபெறக் கூடும். இவையெல்லாம் மட்டும் போதா, நமது விலங்குகளை உடைத்து நம்மை மாமனிதராக்குகின்ற துறவு மனப்பான்மையும் வேண்டும். துறவு என்றால் உடனே காவித்துணியும் கமண்டலமும் மட்டும் ஏன் நினைவிற்கு வருகிறது? தன்னலத்தைத் துறத்தல், சமூகத்தை நேசித்தல், நாட்டை நேசித்தல், உயிர்க்குலத்தை நேசித்தல், உண்பித்து உண்ணுதல், உடுக்கச் செய்து உடுத்தல் இவைதான் உண்மையான துறவு. இந்தத் துறவு காலப்போக்கில் கோலங்களாகிக் குணங்கள் ஆகாமல் தேக்கமடைந்து விட்டன.

இந்திய சந்நியாசிகளுக்கு இன்றுள்ள அறைகூவல் மதங்கள் அல்ல. பாபர் மசூதியும் அல்ல. இராமர் கோயிலும் அல்ல. இன்று நமது நாட்டில் 70% மக்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். அறியாமையில் மூழ்கிக் கிடப்பவர்கள் 58.9% விழுக்காட்டு மக்கள் ஏழ்மையில் கிடந்து உழல்கின்றனர். நடமாடும் கோயில்கள் நலிந்து அழுகின்றன. சராசரி அறிவே இல்லாதவனுக்கு ஞானோபதேசம் செய்யப் போகிறீர்கள். இதோபதேசம்; முத்தியின் இன்பம் இன்று. நமது நாட்டு மக்களுக்கு விளங்குமா? இலையைப் பொத்தலாக்கி விட்டு அறுசுவை உணவு படைப்பதாக உறுதி மொழி கூறுவது நியாயமா?

நமது நாடு இன்று அந்நிய உதவியை நம்பி வாழ்கிறது. இன்றைய இந்தியன் கடனிலே பிறந்து கடனிலே வளர்ந்து கடனோடு சாகிறான். இந்தியன் அடுத்த தலைமுறைக்கு