பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/228

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


கடனையே மூலதனமாகத் தருகிறான். இது ஏன் ? இந்தியாவில் மதச் சடங்குகள், அரசியல் ஆர்ப்பாட்டங்கள் சுக வாழ்க்கையின் தேவைகளில் 25% குறைந்தால் கூட மிகப்பெரிய மூலதனம் சேரும். எல்லாரும் ஒரு மணி நேரம் ஊர்வேலை, நாட்டுவேலை என்று ஒதுக்கிச் செய்தால் நாட்டில் வளர்ச்சிப் பணிகள் நாளும் நடக்கும்.

நமது வளர்ச்சி, நமது நாட்டின் வளர்ச்சி, அது நம்மாலே நடக்க வேண்டும் நாமே இந்தப் புவியை நடத்த வேண்டும். பொதுவில் நடத்த வேண்டும். நிற்பானேன்? பணியைத் தொடங்குமுன்னே வெற்றி தோல்விகளைக் கணக்கிட்டுக் கலங்குவானேன்? எந்த ஒரு பணியும் தொடக்கத்தில் எதிர்ப்புகளைச் சந்திக்கத்தான் வேண்டும் நமக்கு ஏற்படும் எதிர்ப்புக்களை நம்மை வளர்க்கும் உயிர்ப்புக்களாக ஏற்றுக் கொண்டு நடைபோட வேண்டும். எழுந்திரு புவியை நடத்த முற்படு! பொதுவில் நடத்த முற்படு! வேலை செய்! எப்போதும் வேலை செய்து கொண்டேயிரு! இன்றைய மனித வளம் வேலைகளில் முழுமூச்சாக நாட்டுப் பணியில் ஈடுபடும் நாளிலேயே இந்தியா வளரும்! வாழும்! இதுவே விவேகானந்தர் சென்ற பாதை! அவர் நடந்த பாதையில் நடை போடுவோமாக!

விவேகானந்தரின் அருள்வாக்கு இதோ! உங்கள் படிப்பு இந்தப் பரிதாபக் குரல்களின் தேவையை நிறை வேற்றுமா? நிச்சயம் நிறைவேற்றாது. மேலைநாட்டு விஞ்ஞானத்தைக் கொண்டு பூமியை நன்றாக உழுது உணவுப் பொருள்களை மிக அதிகமாக உற்பத்தி செய்யுங்கள். விஞ்ஞானத்தின் துணையுடன் உங்கள் சொந்த முயற்சியையும் இணைத்து வருவாய்க்குரிய புதிய வழிகளைக் கண்டுபிடியுங்கள்; பிறரிடம் அடிமை வேலை செய்து பொருள் ஈட்ட முயலாதீர்கள். தங்களுக்கு வேண்டிய உணவையும், உடையையும் தாங்களே ஈட்டிக் கொள்ளுமாறு அவர்களுக்கு நான் போதிக்கிறேன். உணவுக்காகவும் உடைக்காகவும்