பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/233

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

221


7

இந்தியா இன்று ஒரு வினோதமான நாடாகத் திகழ்கிறது. பணப்புழக்கமும் நிறைய இருக்கிறது. அதே போழ்து பணப்புழக்கமே இல்லாத சிற்றுார்களும் உண்டு. பல நூறாயிரங் குடும்பங்களுக்கு இன்று பணப்பஞ்சம் இருக்கிறது. ஏன்? சில நிறுவனங்களும் கூடப் பணப் பற்றாக்குறையால் இடர்ப்படுகின்றன. நல்ல நோக்கமும் செயற்பாடும் இருந்தாலும் நிறைவேற்ற நிதி ஆதாரங்கள். இருப்பதில்லை; நிதி கிடைப்பதில்லை, நிதிப்பற்றாக்குறை என்பது ஒரு கடுமையான பிரச்சனை. இந்தப் பணப்பற்றாக்குறை இயற்கையானதா? அல்லது நிர்வாகக் கோளாற்றால் அமைந்ததா? பணப்பற்றாக்குறை. இயற்கையாக அமையாது. இயற்கையாக அமைவது ஏழ்மை. பணப்பற்றாக்குறை என்பது ஏழ்மையல்ல.

இந்தப் பணப்பற்றாக்குறையினால் இடர்ப்படும் நிறுவன நிர்வாகத்தில்கூட மனிதச் சிக்கல்களும் தோன்றும். செய்ய வேண்டியனவற்றைச் செய்ய இயலாது. சிலர் பணப்பற்றாக்குறைக்காகச் செலவைச் சிக்கனப்டுத்த எண்ணுவர். வரவுக்கேற்பச் செலவு செய்யும் குணம் இது. நல்ல குணம்தான். ஆனாலும் வளரும் நாட்டுக்கும் நிறுவனத்திற்கும் இந்தக் கொள்கை ஒத்துவராது. அதுமட்டும் அல்ல, வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிக்கும். அதனால்தான் திருவள்ளுவர், பொருளியலைக் கூறும் பொழுது,

"இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு"

என்று கூறினார்.

இயற்றல் என்றால், பொருள் வருதலுக்குரிய-பொருள் ஈட்டுதற்குரிய புதிய புதிய வாயில்களைக் காணுதல் என்பது கருத்து. அதாவது பொருள் ஈட்டத்துக்குரிய அறிவு, ஆற்றல், பொருள் ஈட்டுவதற்குரிய வாயில்கள், செல்வ உற்பத்திக் களங்கள் எல்லாம் இருந்தும் புதிய பொருள் வருவாய்க்குரிய