பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/235

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

223


காலத்தில் உலக மொழிகளில் நிலவிய கருத்துக்களைவிட தமிழ்க் கருத்துக்கள் முற்போக்காகவும், தீவிரமாகவும் இருந்திருக்கின்றன. தமிழ்ச் சிந்தனையின் அடிச்சுவடுகள், இன்று மனித குலத்தைக் கவர்ந்துள்ள மார்க்ஸீய சித்தாந்தத்துடன் அடிப்படையில் முரண்படவில்லை. மாறாக, மார்க்ஸீயே சித்தாந்தத்தின் அடிப்படைக்கூறுகள் மார்க்ஸீயம் தோன்றுவதற்குப் பல்நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழிலக்கியத்தில் கால் கொண்டுள்ளன. மார்க்ளியத்தின் சிறந்த விரிவுரையாளனாக விளங்கி மார்க்ஸீயத்தை நடை முறைப்படுத்தி வெற்றி கண்ட மாமேதை லெனின் உடைய சிந்தனைகளோடு நமது சிந்தனைகளை இணைத்து ஆராய்வது நமது கடமை. இந்த நூற்றாண்டில் பிறந்து வாழும் ஒருவன் லெனினியத்தை அறியாமல் வாழ்வானானால் அவன் ஓர் அறியா மகனேயாவான். அவர் தம் வாழ்க்கையில் அது குறையே! காரணம், மனித இயலை விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து மனித சமுதாயத்தைப் பற்றி நிற்கின்ற துன்பங்களுக்கெல்லாம் காரணம் கண்டதோடல்லாமல் அவற்றிற்கொரு முடிவு கண்ட பெருமை லெனினியத்துக்கு உண்டு. நமது சமுதாயத்தில் வழிவழி வளர்ந்து வந்துள்ள சிந்தனைகளும்-லெனினியமும் கலந்து இணைந்த ஒரு வாழ்க்கைமுறை இன்றையத் தேவையாக இருக்கிறது. அத்தகைய வாழ்க்கைமுறை சாத்தியமாவதற்கு முன்னோடியாக நமது வழி வழி அந்த மரபுகளை லெனினியத்தோடு இணைத்துச் சிந்தனை செய்யவும், கற்கவும் வேண்டியது நமது கடமை. அந்த வகையில் இந்தக் கட்டுரை ஓர் எளிய முயற்சி.

மனிதன் இன்றியமையாது பெற வேண்டிய கருவி அறிவு. இந்த அறிவு மனிதனின் சிந்தனையில் அறிவுதோன்றி அவ்வழிக் கருத்துத் தோன்றி அவ்வழி உலகத்திற்கு விளக்கம் கிடைத்ததென்பர். இவ்வழியில் - மனிதனின் சிந்தனையை மூல முதலாகக் கொண்டே வாழ்க்கை முறைகளும் குணங்களும் தோன்றின என்பது இந்த அணியின் கருத்தாகும். இந்த