பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

போன்று அமைந்திடாமல் கடைக்கோடி மனிதனும் ஏற்றம் பெறும் உண்மையான விடுதலைப் பெருவிழா - மக்களின் விழாவாக மலர வேண்டும்’ என்ற சிந்தனை, உண்மையான மக்களாட்சித் தத்துவத்தை நடைமுறைப் படுத்துமாறு கூறுகின்றது. அயோத்தி மக்களுக்கு இருக்கும் நாட்டு உணர்வு இராவணன் ஆண்ட இலங்கை மக்களுக்கு இல்லாது போனது ஏன்? ஒடுக்கும் தலைமையின் கீழ்ப் பல்லாண்டு காலம் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் மனோபாவம் அது இன்று நமது மக்களிடம் நாட்டுணர்வு மங்கிக் கிடக்கின்றதே இன்று ஒடுக்கும் தலைமை இல்லை. தன்னலம் எனும் அரக்கன் நம் அனைவரையும் ஆட்சி செய்கின்றான். தன்னல அரக்கன் மாய்ந்தால்தான் நாட்டு நலம் என்ற அற்புத தீபஒளி மலரும்.

'அறிவியல் இல்லாத ஆன்மீகம் குருட்டுத்தனம்’ lt generates superstition என்று குறிப்பிடுவார்கள். ஆன்மிகம் இல்லாத அறிவியல் மூடத்தனமானது என்று குறிப்பிடுவார்கள். எந்நேரமும் மூன்றாம் உலகப்போரைத் தோற்றுவித்துவிடும். அறிவியலும் ஆன்மிகமும் இணைந்து செயல்படவேண்டும் என்று தம் அருளியல் வாழ்வோடு சமூக அறிவியல் தொண்டையும் இணைத்து முன்மாதிரியாக விளங்கினார்கள். கல்வி உலகம் படைப்புக் கல்வி உலகமாக மாறவேண்டும் என்ற சிந்தனை இன்றையக் காலத்தின் கட்டாயம். சோவியத் சிந்தனையாளன் சுகோம்லின்ஸ்கி, 'குழந்தைகளுக்கு இதயத்தைக் கொடுங்கள்’ என்றான்! பனித்துளி சிதறாமல் ரோஜா இதழைப் பறிப்பதுபோல் குழந்தைகளுக்குக் கல்வியினைச் செலுத்த வேண்டும் என்ற சிந்தனை நெகிழ வைக்கிறது. வறுமையும் ஏழ்மையும் முயன்று மாற்றத் தக்கவை. மனித முயற்சியால் வறுமையும் ஏழ்மையும் அகல வேண்டும். கடவுள் நம்பிக்கையென்ற பெயரில் மனித முயற்சிகள் முடமாகி விடக்கூடாது. கடவுள் நம்பிக்கை தேவை அறிவறிந்த ஆள்வினை முயற்சிகள் வெற்றி பெறுமாறு கடவுள் நம்பிக்கை வாழ்வியலோடு இணைந்து செயல்பட வேண்டும்.

வளரும் வேளாண்மை, கால்நடை அறிவியல் சிந்தனைகள் இன்றைய வளர்ந்து வரும் விவசாய, பொருளாதார உலகத்திற்கு உடனடித் தேவையாகும். கூட்டுறவுத் துறை என்பது அரசின் ஆதிக்கத் துறையாகி விட்டது. கூட்டுறவுத் துறை மக்கள் இயக்கமாக மாற வேண்டும்.

எங்கே பழங்காலத் திருக்கோயில்களைச் சார்ந்து வளர்ந்த ஆன்மிகம்? நாயன்மார்களும் ஆழ்வார்களும் வளர்த்த ஆன்மிகம் எங்கே? சராசரங்களெல்லாம் சிவம் பெருக்கிய சீலம் எங்கே? 'எந்நாட்டவர்க்கும் இறைவா!' என்ற உலகப் பொதுமை தழுவிய மாணிக்கவாசகரின் ஆன்மிகம் எங்கே? தொண்டலால் உயிர்க்கும் - -