பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/252

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வாரியாக கிளை நிறுவனங்கள் அமைத்துப் பிரசாரம் செய்தல், சமயக் கருத்துக்களை மக்கள் கொள்ளும் வகையில் சிறந்த முறையில் விளக்கிச் சொல்லுவது, உழவாரப் பணி செய்தும் இயன்ற சிறு பணிகளைச் செய்தும் சிறிய கோயில்களைக் காப்பாற்றுதல். ஊர்தோறும் கூட்டு வழிபாட்டு முறையினை வளர்த்தல், சமுதாய நலத்திற்குரிய பொதுநலத் திருப்பணிகளில் ஈடுபட்டு சமுதாயத்திற்கும் சமயத்திற்கும் நெருங்கிய சம்பந்தத்தை உண்டாக்க முயற்சித்தல் இவைகளையே நோக்கமாகக் கொண்டு அருள்நெறித் திருக்கூட்டம் தொடங்கப் பெற்றது.

எங்கும் எழுச்சி நிறைந்த காட்சி

செயலற்ற, உறங்கிக் கிடந்த சமய உலகத்திற்கு அருள்நெறித் திருக்கூட்டத்தின் தோற்றம் ஒரு புதிய எழுச்சியைத் தந்தது. தமிழகத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் அருள்நெறிச் செய்தி பரவியது. நாள்தோறும் சிற்றுார் முதல் பேரூர் வரையிலும் நூற்றுக்கணக்கான மேடைகள் போடப்பட்டன. ஆங்காங்கு அருள்நெறி அறிஞர்களும் ஊழியர்களும் சிறந்த முறையில் மக்கள் முன்னே சமயத்தை எடுத்து வைத்தனர். பத்துப் பன்னிரண்டு பேர்களுக்கு மேலே கூடாது இருந்த சமய பிரசார மேடைகள் மக்கள் வெள்ளத்தைக் காணத் தலைப்பட்டது. இயக்கம் எதிர்பார்த்த அளவுக்கு மேலாகவே சிற்றுார் முதல் மாவட்டம் வரையில் கோபுரம் என் உயர்ந்து வளர்ந்தது. ஏன்? கங்கைக் கரை சீமை முதல் கன்னியாகுமரி வரையிலும் இயக்கம் கால் கொண்டது. தமிழர்கள் வாழும் ஈழத்திலும், மலேயத்திலும் இயக்கம் இடம் பெற்று வளர்ந்தது. மற்ற எந்த இயக்கமும் காணமுடியாத அளவுக்கு ஒரு மகத்தான வெற்றியை-புகழை இயக்கம் அடைந்தது.

வழிபாட்டு முறையில் வளர்ச்சி

திருக்கூட்டம் முக்கியமாக கருதிச் செய்த தொண்டு மக்களைத் திருக்கோயில் வழிபாட்டு முறைகளில் அழைத்துச்