பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/258

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


வேலைமுறைகளையும் திட்டங்களையும் பார்த்துப் பரிவோடு நம்முடன் தொடர்பு வைத்துக் கொள்ள முன்வந்தார். இத்தொடர்பு சரியானதல்ல எனக்கருதி நம்மோடு தோளொடு தோள் கொடுத்து வேலை செய்த சில ஊழியர்கள் நம்மை விட்டுப் பிரிந்தனர். அங்ஙனம் அவர்கள் பிரிந்து சென்றது நமக்கு வருத்தத்தைத் தந்தாலும் அவர்கள் அங்ஙனம் பிரிந்து செல்கின்ற அளவுக்கு ஒன்றும் விபரீதமாக நடந்துவிடவில்லை என்பதை நாம் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. கருத்து மாற்றம் உடையவர்களிடம் கலந்து பழகி, கருத்தைப் பறிமாறிக் கொள்ளுவதுதான் சிறந்த முறை என்று நாம் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. நீண்ட நாட்களாக தூரத்திலே நின்று தெரிந்து கொண்டோ, தெரியாமலோ தன் மனத்தில் பட்டவாறெல்லாம் விமரிசனம் செய்து கொண்டிருந்த அவர்களைத் தற்பொழுது நம்முடைய வேலைத் திட்டங்களாலும், நம்முடைய சீரிய கருத்துக்களாலும் நம்பால் இழுத்து, காழ்ப்பின்றி நாம் சொல்லுவதைக் கேட்கின்ற அளவுக்குத் தயார் செய்திருக்கின்றோம். இதுவே தமிழகத்தில் அருள்நெறித் திருக்கூட்டத்தின் சிறந்த முயற்சி என்று சொன்னால் கூட தவறில்லை. இனிமேல் நாம் சொல்லுகின்றவற்றை அவர்கள் கேட்டு சிந்தித்து தெளிந்து பின்பற்றுவதற்குரிய காலம் வெகு தூரத்தில் இல்லை; வெகு சீக்கிரத்திலேயே இருக்கிறது என்று நம்புகின்றோம். காரணம், நம்முடைய இயக்கம் கால வெள்ளத்திலே இறந்து போகின்ற சாதாரண கருத்துக்களைத் தாங்கியது அல்ல என்றும் எப்பொழுதும் மாறுபடாத எல்லாம் வல்ல இறைவனின் திருவருளைத் தாங்கி நிற்கின்ற இக்கருத்து இவ்வுலகில் மீண்டும் நிலவியே திரும். இதற்கு எத்துணையும் ஐயம் இல்லை.

பெருமைக்குரிய வளர்ச்சி

சற்றேறக் குறைய ஆறு ஆண்டுகள் தமிழ்நாட்டில் வேலை செய்த நமது இயக்கம் வேறு எந்த இயக்கத்திற்கும் இல்லாத அளவுக்கு மிகக் குறுகிய கால எல்லையில் நிறைந்த