பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/269

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

257


வாகக் கடவுள் என்று சொன்னால், சமயம் என்று சொன்னால் அன்பு என்று பொருள்.

"அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆகும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”

- என்று திருமூலர் சொல்லுவார்.

அன்பு இல்லாத ஒரு சமயம் இருக்கிறது என்று சொன்னால் அது நம்முடைய வயிறு தான் சுடுகாடு என்று சொல்லுமாம், மனிதர்கள் இறந்தால் சுடுகாடு எங்கோ மண்ணிலே, ஏதோ ஊருக்கு எல்லையிலே இருக்கிறது. ஆனால் விலங்குகள் இறந்தால் சுடுகாடு நம்முடைய வயிறுதான்.

நமக்கு நம்முடைய சமயம் அன்புச் சமயமாக இருப்பதாலே திருவள்ளுவர், "அன்பின் வழியது உயிர்நிலை” என்று கூறுகிறார். ஒருவருக்கு உயிர் இருக்கிறதா இல்லையா என்பதை எப்படிக் கண்டுபிடிப்பார்கள். டாக்டர் என்று சொன்னால் "ஸ்டெதாஸ் கோப்பை" வைத்துப் பார்ப்பார். ஏதாவது இருக்கிறதா? இல்லையா? என்று "போய் விட்டதா?"என்று நம்முடைய வீட்டிலே, நாட்டு வைத்தி யரைக் கேட்டால் அவர் கையில் நாடி பிடித்துப் பார்ப்பார். பாட்டியைக் கேட்டால் காதைத் தொட்டு, கையைத் தொட்டுப் பார்த்து உயிர் இருக்கிறதா இல்லையா என்று கூறுவாள். சின்னக் குழந்தைகள் அல்லது பள்ளிக் கூடத்திலே படிக்கிறவர்களைக் கேட்டால் தன்னுடைய துணியின் வெள்ளை நூலை எடுத்து மூக்கில் வைத்து, அது ஆடுகிறதா, இல்லையா என்று பார்ப்பார்கள். அதாவது சுவாசம் இருக்கிறதா, இல்லையா, என்று பார்ப்பார்கள், ஆக உயிர் இருக்கிறதா, இல்லையா, என்று பார்ப்பதற்கு இவைகளெல்லாம் நாட்டிலே அளவு கோல்கள். ஆனால் திருவள்ளுவர் என்ன