பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 15.pdf/273

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமயவியல் கட்டுரைகள்

261


சமயமாக இருப்பதாலே, அச்சமயம் உயிர்க் கொலைகளை வரவேற்பதில்லை. காலப் போக்கில், சைவ நெறியில் இருப்பவர்கள், சித்தாந்த நெறியில், சிவநெறியில் இருப்பவர்கள் புலால் உண்பதில்லை என்ற பழக்கம் வந்தது. காலப் போக்கில் அதற்குப் பெயராக சைவ சமயம் என்று வந்து விட்டது. சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் புலால் உண்பதில்லை. அப்படி இருப்பதுதான் மிகச் சிறப்பு. ஆனால், நாடு போகிற போக்கைப் பார்த்தால் சாத்தியமா என்று தோன்றவில்லை. கூடிய வரை முயற்சி செய்து பாருங்கள்.

வாரத்திற்கு ஒருநாள் காய்கறி சாப்பிடுங்கள்; பின் இரண்டு நாளாக மாற்றுங்கள்; மூன்று நாளாக மாற்றுங்கள். இப்படிச் சிறிது சிறிதாக மாற்றுவது நல்லது. பொதுவாகவே நல்ல சத்தான உணவுகள் கிடைக்க, படிப்பதற்கு, எழுதுவதற்கு, வேலை செய்வதற்கு எல்லாம் நல்ல காய்கறி, பழங்கள், உணவுகள், உதவி செய்வதைப் போல, மற்ற உணவுகள் உதவி செய்யாது. ஆகவே, சைவ சமயம் என்பதற்குப் புலால் உண்ணாமை என்பது ஒரு கொள்கை ஒரு ஒழுகலாறு, அப்படி ஒழுகலாறு, இருப்பதற்குக் காரணம் என்னவென்று சொன்னால் அது கடவுள் என்பதற்கு அன்பாக இருப்பார் என்பதுதான் காரணம். அது அவருக்கு இலக்கணம். உலகம் முழுவதும் அவருடைய உயிர் ஓவியமாக இருப்பதனாலே, அதை அவர் ஒரு கேள்வியாகக் கூடக் கேட்பார். இப்படியெல்லாம் நாம் விழாக்கள் செய்யும் பொழுது தென்னை மரத்திலே குருத்து வெட்டித் தோரணம் கட்டுகிறோம். அப்புறம் வாழை மரத்தை வெட்டிக் கட்டுகிறோம். அது கூடத் தவறுதான், அது நமக்கு அழகாக இருப்பதற்கு அவ்வாறு செய்கிறோம். நமக்கு அழகாக இருக்கிறது என்பதற்கு ஒரு குருத்து மட்டையை வெட்டினால், ஒரு குலை தேங்காய் போய்விட்டது. அது இந்தக் குரல்வளையைப் பிடித்து நசுக்குவது போல தான், அந்தத் தென்னங்குருத்தை வெட்டுவது.